இம்ரான் கானுக்கு அப்றம் தோனி தான்.. தனியாளாக ஆவரேஜ் அணியை வெச்சே சாதிச்ச கேப்டன்.. சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப் பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அத்துடன் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள அவர் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படும் தோனி பலருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.

முன்னதாக தம்மிடம் உள்ள வீரர்களை வைத்து அவர்களின் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெறுவதில் தோனி வல்லவராக அறியப்படுகிறார். குறிப்பாக 2023 ஐபிஎல் தொடரில் துசார் தேஷ்பாண்டே ரன்களை வாரி வழங்கினார். அதனால் அவரை அணியிலிருந்து நீக்குமாறு சிஎஸ்கே ரசிகர்களே கடுமையாக விமர்சித்தனர். ஆனால் கடைசி வரை அவரை நீக்காத தோனி தொடர்ச்சியாக விளையாட வைத்து கோப்பையை வென்று காட்டினார்.

- Advertisement -

இம்ரான் கான் மாதிரி:

இந்நிலையில் சராசரியான வீரர்களைக் கொண்ட அணியை வைத்தே பெரிய வெற்றிகளைப் பெறுவதில் தோனி சிறந்த கேப்டன் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார். குறிப்பாக சராசரியான வீரர்களை வைத்து 1992 உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் போல தோனி திறமையுடையவர் என்று அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“என்னுடைய காலத்தில் இம்ரான் கானை அந்தளவுக்கு தரவரிசைப் படுத்துவேன். அதன் பின் மகேந்திர சிங் தோனியால் கேப்டனாக என்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்ததை சொல்லலாம். அவர் தனியாளாக அணியின் தரத்தை உயர்த்தினார். சில நேரங்களில் சராசரியான அணி அல்லது அனுபவமற்ற அணியையும் வைத்து அசத்தினார்”

- Advertisement -

மஞ்ரேக்கர் பாராட்டு:

“எடுத்துக்காட்டாக 2007 டி20 உலகக் கோப்பைக்கு சென்று சாம்பியன் பட்டத்தை வென்றதை சொல்லலாம். அதே போல பெரிய போட்டிகளில் அசத்த வேண்டிய சூழ்நிலைகளில் அவர் வித்தியாசமாக செயல்பட்டார். (2011 உலகக் கோப்பை) இறுதிப்போட்டியில் அதற்கு முன் ஒரு லீக் போட்டியில் விளையாடியதைப் போல் விளையாடி அசத்தினார்”

இதையும் படிங்க: ஐ.பி.எல்-லில் ஓய்வுபெற்ற கையோடு வெளிநாட்டு லீக்கில் தனது பெயரை பதிவுசெய்த அஷ்வின் – எந்த தொடர் தெரியுமா?

“சில நேரங்களில் நிறைய வீரர்கள் பெரிய போட்டிகளில் அசத்துவதற்காக தங்களுடைய அனைத்தையும் வைத்திருக்கும் தருணங்கள் இருக்கும். அது சில கேப்டன்களுக்கும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். எம்எஸ் தோனி அந்த வகையைச் சேர்ந்தவர்” என்று கூறினார். தற்போது 45 வயதாகும் தோனி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement