அதை செய்த பின்பும் கூல் ட்ரிங்க்ஸ் தூக்க முடியாது.. தமிழ்நாடு அணியிலிருந்து விலகியது ஏன்? விஜய் சங்கர்

Vijay Shankar
- Advertisement -

தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக விஜய் சங்கர் கடந்த பல வருடங்களாக விளையாடி வந்தார். உள்ளூரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிய அவர் விஜய் ஹசாரே கோப்பை, சயீத் முஷ்டாக் அலி கோப்பைகளை வென்றுள்ளார். 2019 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாட தேர்வான அவர் பெரியளவில் சிறப்பாக செயல்படவில்லை. அதனால் அந்த இந்திய அணியில் கழற்றி விடப்பட்ட அவர் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வந்தார்.

தற்போது தமிழ்நாடு அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள அவர் இனிமேல் திரிபுரா அணிக்காக விளையாட முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார். 34 வயதாகும் அவர் அதற்காக தமிழ்நாடு வாரியத்திடம் இருந்து தேவையான சான்றிதழ்களை வாங்கியுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு அணிக்காக நீண்ட வருடங்கள் விளையாடியும் தமக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கவில்லை என்று விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கூல் ட்ரிங்ஸ் தூக்க முடியாது:

அதனாலேயே தொடர்ந்து பெஞ்சில் அமர்ந்து கூல்டிரிங்ஸ் தூக்க விரும்பாத தாம் தமிழ்நாடு அணியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஹிந்து இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது, நீங்கள் நகர்ந்து முன்னேறி வாய்ப்புகளைத் தேட வேண்டும்”

“நான் நன்றாக விளையாடினேன் என்று நினைக்கிறேன். அதனால் கிரிக்கெட்டை நான் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன் அவ்வளவு தான். அதற்காக நான் வெளியே போய் உட்கார்ந்து தண்ணீர் கொடுக்க முடியாது. இத்தனை வருடங்களாக விளையாடி வருவது மிகவும் கடினம். கடந்த ரஞ்சிக்கோப்பையில் முதல் 2 போட்டிகளில் நீக்கப்பட்ட நான் பின்னர் கம்பேக் கொடுத்தேன்”

- Advertisement -

கிளம்பும் சங்கர்:

“சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் கடைசி 2 போட்டிகளில் நான் நீக்கப்பட்டேன். அப்போதிலிருந்தே கடினமான தருணங்கள் உருவாகின. ஏதோ ஒரு கட்டத்தில் உங்களுக்கு தெளிவு தேவை. ஆனால் அந்த தெளிவு எனக்கு கிடைக்கவில்லை. தேர்வாளர்களைப் பொறுத்த வரை எனக்கு எப்போதுமே பாதுகாப்பான உணர்வு கிடைக்கவில்லை”

இதையும் படிங்க: சுப்மன் கில் இருக்கட்டும்.. தோனி மாதிரியான அவரை கேப்டனானா இந்தியா 2027 உ.கோ ஜெய்க்கும்.. ரெய்னா பேட்டி

“அதனால் ஒரு கட்டத்தில் நான் முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். அப்போது குறைந்தபட்சம் எங்களுடைய பயிற்சியாளர் என்னிடம் வந்து தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய விளக்கத்தை சொன்னார். அதனால் இனிமேலும் இங்கு இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று உணர்ந்த நான் வேறு இடத்தில் விளையாடுவதற்கான வாய்ப்புகளை தேட வேண்டியிருந்தது. 2022 தவிர்த்து மற்ற வருடங்களில் எனக்கு நிலையான பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. வாய்ப்பு கொடுக்கப்படாததற்கான விளக்கமும் கொடுக்கப்படவில்லை” என்று கூறினார்.

Advertisement