சுப்மன் கில் இருக்கட்டும்.. தோனி மாதிரியான அவரை கேப்டனானா இந்தியா 2027 உ.கோ ஜெய்க்கும்.. ரெய்னா பேட்டி

Suresh Raina
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஆல் ஃபார்மட் கேப்டனாக சுப்மன் கில்லை நியமிக்க பிசிசிஐ முயற்சித்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தை கழற்றி விட்ட பிசிசிஐ அவரை புதிய கேப்டனாக நியமித்துள்ளது. அந்த வாய்ப்பில் இங்கிலாந்தில் 754 ரன்கள் அடித்த கில் பல சாதனைகள் புரிந்து இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார்.

அதனால் டி20 அணியில் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை கழற்றி விட்ட பிசிசிஐ சுப்மன் கில்லை புதிய துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் துணைக் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சுப்மன் கில் வேண்டாம்:

ஏனெனில் 2027 உலகக் கோப்பையில் 39, 40 வயதில் அவர்களால் நல்ல ஃபார்மில் அசத்த முடியுமா என்பது கேள்விக்குறியாகும். எனவே வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடருடன் ரோஹித்தை கழற்றி விட்டு சுப்மன் கில் தலைமையில் புதிய ஒருநாள் அணியை பிசிசிஐ உருவாக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதனால் 2027 உலகக் கோப்பையில் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் சுப்மன் கில் இந்திய அணியை கேப்டனாக தலைமை தாங்க சரியானவர் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஆனால் அவரை விட அனுபவம் மற்றும் ஆல் ரவுண்ட் திறமையுடைய ஹர்திக் பாண்டியா கேப்டனாக அதிசயங்களை நிகழ்த்துவார் என்று ரெய்னா தெரிவித்துள்ளார். குறிப்பாக தோனி, கபில் தேவ் போல பாண்டியா திறமையுடையவர் என்று ரெய்னா கூறியுள்ளார்.

- Advertisement -

ரெய்னா தேர்வு:

எனவே 2027 உலகக் கோப்பையில் பாண்டியா கேப்டனாக செயல்படுவது இந்தியாவின் வெற்றிக்கு வித்திடலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் கேப்டனாக வர வாய்ப்புள்ளது. அவர்களும் அதையே முடிவெடுத்துள்ளார்கள். ஸ்ரேயாஸை விட கில் தலைமைப் பொறுப்புக்கு வர வாய்ப்புள்ளது”

இதையும் படிங்க: இதோட முடிஞ்சிடாது.. கே.எல் ராகுல் நிச்சயமா கம்பேக் கொடுப்பாரு – சுரேஷ் ரெய்னா நம்பிக்கை

“ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இப்போதும் ஹரிதிக் பாண்டியா கேப்டனாக மிராக்கள்களை நிகழ்த்துவார் என்று நான் கருதுகிறேன். அவரிடம் கபில் தேவ் பாஜி போன்ற அனுபவம் இருக்கிறது. மிகவும் நேர்மறையான அணுகு முறையைக் கொண்ட அவர் வீரர்களின் கேப்டன். அவர் எம்எஸ் தோனியின் தோற்றத்தை எனக்கு காண்பித்தார். களத்தில் அவர் தன்னைத்தானே நடத்திக் கொள்வதை நான் விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement