ஆல்ரெடி முடிவு பண்ணிட்டாங்க.. ஸ்ரேயாஸ் ஐயருக்கு அந்த பதவியும் கிடைக்க வாய்ப்பே இல்ல.. ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டதும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதும் சர்ச்சையை உண்டாக்கியது. ஏனெனில் 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் 2025 சீசனில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து ஃபைனல் அழைத்துச் சென்றார். 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்து இந்தியா கோப்பை வெல்ல உதவினார்.

அப்படிப்பட்ட அவருக்கு ஆசியக் கோப்பையில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை. மறுபுறம் டி20 கிரிக்கெட்டில் 150 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் தொடர்ச்சியாக விளையாடத் தடுமாறிய கில் சமீபத்தில் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த வாய்ப்பில் 754 ரன்கள் அடித்த அவர் இங்கிலாந்தில் தொடரை சமன் செய்ய உதவினார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ்க்கு வாய்ப்பில்லை:

அதன் காரணமாக டி20 கிரிக்கெட்டிலும் அவரை கேப்டனாக்க விரும்பும் பிசிசிஐ இப்போதே துணைக் கேப்டனாக அறிவித்துள்ளது என்றே சொல்லலாம். இதற்கிடையே ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித்துக்கு பின் ஸ்ரேயாஸை கேப்டனாக தேர்ந்தெடுக்க பிசிசிஐ விரும்புவதாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஒருநாள் கிரிக்கெட்டிலும் சுப்மன் கில் கேப்டன் என்பது முடிவெடுக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கே வதந்தி தொழிற்சாலை செயல்பாட்டில் இருக்கிறது. அது சுப்மன் கில்லை முந்தி ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக வருவார் என்று சொல்கிறது. என்னுடைய கருத்துப்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமலேயே அடுத்த ஒருநாள் கேப்டன் யார் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது சுப்மன் கில் அடுத்த கேப்டன் என்பது தீர்மானிக்கப்பட்டு விட்டது”

- Advertisement -

கேப்டன் சுப்மன் கில்:

“டெஸ்ட் கேப்டனாக இருக்கும் அவர் டி20 கிரிக்கெட்டில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதில் லாஜிக் இல்லையென்றாலும் அக்சர் படேல் எதுவும் தவறாக செய்யவில்லை. ஆனால் அவரிடம் இருந்த துணை கேப்டன்ஷிப் பொறுப்பை பெற்றுள்ள சுப்மன் கில் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் துணைக் கேப்டனாக இருக்கிறார். அதனால் யார் அடுத்த ஒருநாள் கேப்டன் என்று என்னிடம் கேட்காதீர்கள்”

இதையும் படிங்க: டெஸ்ட் போட்டிகளில் இந்த கஷ்டம் எல்லாம் இருக்கும்.. ரோஹித் சர்மா அளித்த பேட்டி – விவரம் இதோ

“சுப்மன் கில் அடுத்த கேப்டனாகப் போகிறார். அதே சமயம் 2024 ஐபிஎல் கோப்பையை வென்ற ஸ்ரேயாஸ் பஞ்சாப்பை ஃபைனல் அழைத்துச் சென்று சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதனால் அவர் கேப்டன்ஷிப்பை பெறுவதற்கு வாய்ப்பிருந்தது. ஆனால் குஜராத்தை 2வது வாய்ப்பில் பிளே ஆஃப் அழைத்துச்சென்ற கில் இங்கிலாந்தில் தொடரை சமன் செய்தார். அதனால் சுப்மன் கில் ரெக்கார்ட் அவ்வளவு மோசமாக இல்லை” என்று கூறினார்.

Advertisement