ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் கழற்றி விடப்பட்டு துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகப்பெரிய விமர்சனங்களை எழுப்பியது. அதனால் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரை ஏராளமான ரசிகர்கள் மற்றும் நிறைய முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.
ஏனெனில் ஸ்ரேயாஸ் ஐயரை ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை? என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. அதற்கு யாருக்கு பதிலாக அவரை தேர்ந்தெடுப்பது என்று நீங்களே சொல்லுங்கள்? என அகர்கர் பதில் கேள்வி எழுப்பினார். அதனால் அவருடைய பதில் முட்டாள்தனமாக இருப்பதாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் மற்றும் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்தார்.
அகர்கர் தலைமையில்:
மறுபுறம் அஜித் அகர்கரை பிசிசிஐ பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இந்நிலையில் இந்திய ஆடவர் அணியை தேர்ந்தெடுக்கும் தேர்வு குழுவிலிருந்து எஸ் சரத் உட்பட 2 தேர்வுக்குழு உறுப்பினர்கள் விடை பெறுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. தற்சமயத்தில் அஜித் அகர்கர் தலைமையில் எஸ்எஸ் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, அஜய் ரத்ரா, எஸ் சரத் ஆகியோர் தேர்வுக்குழுவில் உள்ளனர்.
அதில் அஜித் அகர்கர் செயல்பாடுகள் நன்றாக இருப்பதாக கருதும் பிசிசிஐ அவருடைய பதவியை 2026 வரை நீட்டித்துள்ளது. கடந்த வருடம் நியமிக்கப்பட்ட அஜய் ரத்ரா தொடர உள்ளார். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த தெற்கு மண்டல தேர்வாளர் எஸ் சரத் 4 வருட பதவி காலம் முடித்துள்ளார். இருப்பினும் அகர்கரை போல அவருடைய பதவியை நீட்டிக்காத பிசிசிஐ தேர்வுக் குழுவிலிருந்து விடுவித்து அனுப்பவுள்ளது.
பிசிசிஐ அறிவிப்பு:
அவருடன் பேனர்ஜி அல்லது எஸ்எஸ் தாஸ் ஆகியோரில் ஒருவரும் விடை பெற உள்ளனர். எனவே அடுத்த தேர்வுக்குழுவும் அஜித் அகர்கர் தலைமையில் உருவாக்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் காலியாக உள்ள எஞ்சிய 2 தேர்வுக்குழுவின் உறுப்பினர்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்து அறிவித்த – அஜின்க்யா ரஹானே
அதற்கு குறைந்தது 7 டெஸ்ட் போட்டிகள் அல்லது 30 முதல் தர போட்டிகள் அல்லது 10 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 முதல் தர விளையாடியிருக்க வேண்டும் என்பது தகுதியாகும். அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று 5 வருடங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அந்த 5 வருடங்களில் பிசிசிஐ நிர்வாகத்தில் எந்த பதவியையும் வகித்திருக்கக் கூடாது. மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



