ஸ்ரேயாஸ் மட்டுமல்ல துளிர்ந்த சஞ்சு சாம்சன் கேரியரையும்.. சுப்மன் கில் முடிக்க வராரு.. ஆகாஷ் சோப்ரா பேட்டி

Aakash Chopra
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அவர்களுக்கு பதிலாக சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தனைக்கும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் தொடர்ச்சியாக 150 – 170 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடிக்க தடுமாறினார்.

மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே கொஞ்சம் அதிரடியாக விளையாடும் ஸ்டைலை கொண்ட ஜெய்ஸ்வால் டி20 போட்டிகளில் வேகமாக ரன்கள் குவிக்கும் திறமையுடையவர். 2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 2014க்குப்பின் பஞ்சாப்பை ஃபைனலுக்கு அழைத்துச் சென்றவர். 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா கேப்டனாக வென்ற அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -

சாம்சன் கேரியர்:

இருப்பினும் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் ஸ்ரேயாஸ் ஐயர் டி20 கேரியருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமின்றி ஓப்பனிங்கில் விளையாடத் துவங்கியது முதல் துளிர்த்த சஞ்சு சாம்சன் டி20 கேரியரையும் சுப்மன் கில் முடிக்க வந்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா மறைமுகமாக தெரிவித்துள்ளார். ஏனெனில் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் பிளேயிங் லெவனில் விளையாடுவார் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அதனால் அபிஷேக்குடன் அவர் களமிறங்குவார் என்பதால் சாம்சன் நீக்கப்படுவார் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா ஆல் ஃபார்மட் கேப்டனை (கில்) உருவாக்கும் வழியில் நகர்ந்துள்ளது. அதற்காக ஒரு தனிநபரின் தேர்வு மற்றொரு வீரரின் தலையெழுத்தை மாற்றி அமைக்க உள்ளது”

- Advertisement -

வந்துள்ள கில்:

“அது சுப்மன் கில் பேட் அல்லது அகர்கர் பேனாவிலிருந்து வருவதாக இருக்கலாம், ஆனால் சாம்சனின் விதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் திலக் வர்மா, சூரியகுமார் 3, 4வது இடங்களில் விளையாடுவார்கள் என்பதால் சாம்சன் பிளேயிங் லெவனில் விளையாடப்போவதில்லை. இந்த அணியில் தனிப்பட்ட நபர்களைத் தாண்டி இடங்களை மையப்படுத்தி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது”

இதையும் படிங்க: சுப்மன் கில்லை சேத்தது எல்லாம் சரிதான்.. ஆனா அந்த 2 பேரை ஏன் சேக்கல – கேள்வியை தூண்டியுள்ள அணித்தேர்வு

“சுப்மன் கில் மீண்டும் வந்துள்ளார் என்றால் சாம்சன் விளையாடப் போவதில்லை என்று அர்த்தம். ஜிதேஷ் சர்மா கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாடுவார்” என்று கூறினார். அவர் கூறுவது போல எந்த அணியும் துணை கேப்டனை பெஞ்சில் அமர வைக்க மாட்டார்கள். அதனால் அபிஷேக், கில், திலக், சூரியகுமார் டாப் 4இல் விளையாடுவார்கள். ஏற்கனவே சாம்சன் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடியதில்லை. அதனால் விக்கெட் கீப்பராக ஜிதேஷ் மிடில் ஆர்டரில் விளையாட வாய்ப்புள்ளது. சாம்சன் பெஞ்சில் அமரவே வாய்ப்புள்ளது.

Advertisement