ஆசிய கோப்பை தொடரில் கே.எல் ராகுல் விளையாடனும்னா.. இந்தவொரு சான்ஸ் தான் இருக்கு – விவரம் இதோ

KL Rahul
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் இந்திய அணிக்காக கடந்த 2014-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 63 டெஸ்ட் போட்டிகள், 85 ஒருநாள் போட்டிகள் மற்றும் 72 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து கடந்து 2013-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் 145 போட்டிகளில் விளையாடியுள்ளதோடு சேர்த்து ஒரு சில சீசன்களில் கேப்டனாகவும் இருந்த அனுபவம் உடையவர்.

ஆசிய கோப்பை தொடரில் கே.எல் ராகுல் இடம்பெற இதுதான் வழி :

தற்போது இந்திய அணியின் சீனியர் வீரராக மாறியுள்ள அவர் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவரை மீண்டும் டி20 அணியிலும் சேர்க்க வேண்டும் என பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியிருந்த அவர் 149 ஸ்ட்ரைக் ரேட்டுடனும், 53 ரன்கள் சராசரியுடனும் 539 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதோடு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.

இப்படி தொடர்ச்சியாக கே.எல் ராகுல் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ரன்களை குவித்து வருவதால் அவரை மீண்டும் டி20 அணிக்கு கொண்டு வரவேண்டும் என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்நிலையில் இன்று வெளியான ஆசிய கோப்பை தொடருக்கான டி20 அணியில் கே.எல் ராகுலுக்கு இடம் கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

ஆனால் ஆசிய கோப்பை தொடரில் அவர் இடம்பெற வேண்டுமெனில் ஒரே ஒரு வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பு யாதெனில் : ஏற்கனவே டி20 இந்திய அணியிலும் சரி, ஐ.பி.எல் போட்டிகளிலும் சரி அவர் விக்கெட் கீப்பராக விளையாடியுள்ளதால் இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் பிடித்துள்ள சஞ்சு சாம்சனுக்கு காயம் ஏற்பட்டால் நிச்சயம் உடனடியான மாற்று வீரராக கே.எல் ராகுல் அணியில் இடம் பிடிப்பார்.

இதையும் படிங்க : யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை நம்ப வைத்து ஏமாற்றிய கவுதம் கம்பீர்.. சொன்ன வார்த்தை என்ன ஆச்சு? – விவரம் இதோ

ஏற்கனவே ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு பேக்கப் வீரராக ஜிதேஷ் சர்மா இருந்தாலும் அனுபவ வீரரான கே.எல் ராகுல் நேரடியாக அணியில் இடம் பிடிப்பதோடு மட்டுமின்றி பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விளையாட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement