ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட காயத்தை பாத்து ஒரு புதிய ரூல்ஸ்ஸை அமல்படுத்திய பி.சி.சி.ஐ – என்ன ரூல் தெரியுமா?

Rishabh Pant and BCCI
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியின் போது விளையாடியிருந்த இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தினை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து விளையாட ஆசைப்பட்டு பந்தினை கணிக்க தவறியதால் அந்த பந்து நேரடியாக ரிஷப் பண்டின் கால் பகுதியில் தாக்கியது. இதனால் வலியில் துடித்த அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

புதிய விதிமுறையை அறிமுகப்படுத்திய பி.சி.சி.ஐ :

பின்னர் அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் போது அவரது கால் பாதத்தில் எறும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இருப்பினும் அவர் இந்திய அணியின் இக்கட்டான சூழல் கருதி முதல் இன்னிங்சின் போது உடைந்த பாதத்துடன் பேட்டிங் செய்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ்சின் போது அவர் பேட்டிங் செய்ய வரவில்லை. அதேபோன்று அந்த காயத்தால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் வெளியேறினார்.

- Advertisement -

ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து இங்கிலாந்து வீரரான கிரிஸ் வோக்ஸ் ஐந்தாவது போட்டியின் போது தோள்பட்டை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒற்றை கையுடன் பேட்டிங் செய்ய வந்தார். இதையெல்லாம் கவனித்த கிரிக்கெட் விமர்சகர்கள் இதுபோன்று போட்டியில் ஒரு வீரரால் முற்றிலுமாக விளையாட முடியாது என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவருக்கு பதிலாக மாற்று வீரரை கொண்டு வர வேண்டும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலையில் அடிபட்டு கன்கஷன் ஏற்பட்டால் மட்டுமே ஒரு வீரருக்கு பதில் மாற்று வீரர் வந்து விளையாடலாம் என்ற விதி இருக்கிறது. ஆனால் அதைவிட இப்படி ஒரு வீரர் விளையாடவே முடியாத சூழலில் இருக்கும் போது அவர்களுக்கு பதிலாக மாற்று வீரரை கொண்டுவர அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதற்காக புதிய விதி வரவேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த விடயத்தை கையிலெடுத்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியுமான பி.சி.சி.ஐ உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளின் போது ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்கள் நடைபெறும் ஆட்டங்களில் ஒரு வீரர் தீவிர காயத்தால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக அதிகாரப்பூர்வமாக மாற்று வீரரை களமிறக்கி விளையாடலாம் என்ற ஒரு புதிய விதிமுறையை அமல்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலியின் மகத்தான சாதனையை 3 போட்டியில் முறியடித்த பேபி ஏ.பி.டி – விவரம் இதோ

இந்த விதிமுறையின் மூலம் இனி டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்பட்டு அவர்களால் போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாத பட்சத்தில் அவருக்கு பதிலாக வெளியில் இருக்கும் மாற்றுவீரரை களமிறக்கி விளையாடலாம் என்கிற வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement