இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற கையோடு டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய அணியின் புதிய டி20 கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்பதே பலரது விருப்பமாகவும், கணிப்பாகவும் இருந்தது. ஆனால் மாறாக இந்திய அணியின் நிர்வாகம் புதிய டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்து அதிரடி காட்டியிருந்தது.
ஹார்டிக் பாண்டியாவின் கனவை நொறுக்கிய கம்பீர் :
இப்படி ஹார்டிக் பாண்டியாவை தாண்டி சூர்யகுமார் யாதவுக்கு கேப்டன் பதவியை காரணமே அவரது பாண்டியாவின் தொடர்ச்சியான காயம் மற்றும் தனிப்பட்ட குடும்ப சூழல்தான் என்று அப்போது பேசப்பட்டது. அதோடு கௌதம் கம்பீர் சூர்யகுமார் யாதவ் மீது தனிப்பட்ட முறையில் நிறைய நம்பிக்கை வைத்திருப்பதாலே அவருக்கு கேப்டன் பதவி வழங்கியதாகவும் பேசப்பட்டது.
அதனை தொடர்ந்து சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் இந்திய அணியில் கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்றாலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இந்த ஆண்டு மும்பை அணியை ஹார்டிக் பாண்டியா வழிநடத்தி இருந்தார்.
எப்படியாவது இந்திய அணியின் டி20 கேப்டனாக பதவிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த பாண்டியாவின் கனவு தற்போது கௌதம் கம்பீரின் முடிவால் முற்றிலும் உடைந்து போயுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் வெளியான தகவலின் படி : இனி ஹார்டிக் பாண்டியா இந்திய டி20 அணிக்கு எப்போதும் கேப்டனாக நியமிக்கப்பட மாட்டார் என்று உறுதியாகியுள்ளது.
ஏனெனில் தற்போதைய கேப்டனாக இருக்கும் சூரியகுமார் யாதவுக்கு பிறகு டி20 அணியின் கேப்டனாக அணியின் எதிர்கால நட்சத்திர வீரரான சுப்மன் கில்லை நியமிக்கவே கம்பீர் ஆர்வம் காட்டுகிறாராம். ஏனெனில் மூன்று வகையான இந்திய அணிக்கும் கேப்டனாகும் தகுதி அவரிடம் இருப்பதினாலும், கேப்டனாக பல ஆண்டுகள் தொடர்ச்சியாக அவரால் செயல்பட முடியும் என்கிற நம்பிக்கை காரணமாகவும் அவர்மீது கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினர் கவனத்தை செலுத்துகின்றனர்.
இதையும் படிங்க : 2026 ஐ.பி.எல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு இந்த வீரர் தான் ஏலம் போவார் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு
அதன் காரணமாக இந்திய டி20 அணியின் கேப்டனாகும் பாண்டியாவின் கனவு தற்போது நொறுங்கியுள்ளது. ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் விரைவில் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியையும் பெறயிருப்பதாக கடைந்த சில நாட்களாகவே பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



