இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. குறிப்பாக ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்யாசத்தில் மிராக்கள் வெற்றி பெற்றது. முன்னதாக அந்தத் தொடரில் மிகவும் பரபரப்பான விறுவிறுப்பான தருணங்களைப் போல சில சர்ச்சையான தருணங்களும் அரங்கேறின.
குறிப்பாக 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது கேப்டன் கில், ராகுல் சிறப்பாக விளையாடி இந்தியாவை சரிவிலிருந்து மீட்டனர். அதை வீணடிக்காமல் ரவீந்திர ஜடேஜா மற்றும் சுந்தர் ஆகியோர் இந்தியாவை தோல்வியிலிருந்து காப்பாற்றி முன்னிலைப்படுத்தி சதத்தை நெருங்கினார்கள்.
பென் ஸ்டோக்ஸ் செயல்:
அப்போது இனிமேலும் இந்தியாவை தோற்கடிக்க முடியாது என்று கருதிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அவர்களுடைய சதத்தை தடுக்கும் நோக்கத்துடன் ஆட்டத்தை முடித்துக் கொள்ள வந்தார். அத்துடன் பென் டக்கெட், ஹாரி ப்ரூக் போன்ற பகுதி நேர பவுலர்களை அடித்து நீங்கள் சதத்தை அடிக்க விரும்புகிறீர்களா? என்று ஜடேஜாவிடம் அவர் அவமதிக்கும் வகையில் பேசினார். மேலும் சதத்தை அடிக்க விரும்பினால் பவுன்சர் போட்டு உங்களுடைய மண்டையில் அடிப்போம் என்று ஜோப்ரா ஆர்ச்சர் மிரட்டினார்.
இருப்பினும் அதற்கு இந்திய கேப்டன் ஜில் சம்மதம் தெரிவிக்காததால் தொடர்ந்து விளையாடிய சுந்தரும் ஜடேஜாவும் சதத்தை அடித்தனர். அதன் பின் இந்தியா போட்டியை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. அதைப் பார்த்த இங்கிலாந்தினர் இந்தியா கிரிக்கெட்டை நேர்மையாக விளையாடாமல் சொந்த சாதனைகளுக்காக விளையாடியதாக விமர்சித்தனர். இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் செய்த அந்த செயல் கடைசிப் போட்டியிலும் வெல்ல வேண்டும் என்ற எக்ஸ்ட்ரா ஸ்பார்க்கை இந்திய அணியில் உண்டாக்கியதாக வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். இது பற்றி சுந்தர் பேசியது பின்வருமாறு.
உண்டான ஸ்பார்க்:
“அது எந்த வகையான கிரிக்கெட்டிலும் நடக்கக் கூடியதல்லவா? அது போன்ற நிறைய விஷயங்கள் கிரிக்கெட்டை தாண்டி மற்ற விளையாட்டுகளிலும் நாம் பார்த்துள்ளோம். அது தான் விளையாட்டாகும். அது நிறைய கொண்டு வருகிறது. அந்தக் குறிப்பிட்ட தருணம் எங்கள் அனைவருக்கும் அனுபவமாக கிடைத்தது. 100% அந்த நிகழ்வு எங்களுடைய அணியில் ஸ்பார்க்கை உண்டாக்கியது”
இதையும் படிங்க: ஒரு காலத்தில் என்னை வெளுத்து வாங்கிய கம்பீர்.. இப்போ இந்திய அணியில் எனக்கு சப்போர்ட் பன்றாரு.. சுந்தர் பேட்டி
“நீங்கள் அதை எந்த இந்திய வீரரிடமும் கேட்டுப் பாருங்கள். குறிப்பாக நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சவாலை சந்திக்க விரும்புவீர்கள். கடினமான சூழ்நிலைகள் தான் உங்களை சவாலைத் தாண்டி வெற்றிகரமாக செயல்பட உதவும். டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலான வீரர்கள் நீண்ட காலமாக வெற்றிகரமாக தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடியுள்ளார்கள்” என்று கூறினார்.



