இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் அவருக்கு பதிலாக தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் துவக்க வீரராக இடம் பிடித்துள்ள கே.எல் ராகுல் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 500 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். மேலும் இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் 500-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த இரண்டாவது இந்திய துவக்க வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தி இருந்தார்.
கே.எல் ராகுலுக்கு டி20 அணியில் இடமில்லை :
அதோடு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடியிருந்த அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக அவர் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியிலும் கே.எல் ராகுல் கம்பேக் கொடுப்பார் என்று பலராலும் பேசப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி :
இந்திய டி20 அணியில் கே.எல் ராகுலுக்கு வாய்ப்பு இல்லை என்றும் அதற்காக அவருக்கே தகவல் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வுக்குழுவானது எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்காக இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்ய முனைப்பு காட்டுகிறது.
இதன் காரணமாக இந்திய டி20 அணியில் மீண்டும் கே.எல் ராகுல் இடம்பெற முடியாது என்று தெரிகிறது. டி20 போட்டிகளை பொருத்தவரை தற்போதைய நிலையில் சஞ்சு சாம்சனுக்கு பேக்கப் வீரராக துருவ் ஜுரேல், ஜிதேஷ் சர்மா ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.
அதனால் கே.எல் ராகுல் என்னதான் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது. தற்போதைய டி20 அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் இருக்கும் வேளையில் அவருக்கு மாற்றாக ஜிதேஷ் சர்மா தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 5 மாசமா ஒரு மேட்ச்சும் ஆடல.. ஆனாலும் தரவரிசையில் 2-ஆம் இடம் பிடித்த ரோஹித் சர்மா – எப்படி தெரியுமா?
ஏனெனில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் பினிஷர் ரோலில் ஆர்.சி.பி அணிக்காக அசத்தியதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. ஒருவேளை அவருக்கு வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் இந்திய டெஸ்ட் அணியில் அசத்தலாக செயல்பட்டு வரும் துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிகிறது.



