அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து வெற்றிகரமாக நாடு திரும்பியுள்ளது. அடுத்ததாக இந்திய அணியானது அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது.
சூரியகுமார் யாதவ் நிகழ்த்தவிருக்கும் சாதனை :
அந்த வகையில் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறயிருக்கும் இந்த தொடரானது எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டு 20 ஓவர் போட்டிகளாக நடத்தப்பட இருப்பதால் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியே இந்த தொடரில் விளையாடுகிறது.
இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் அணித்தேர்வு இன்னும் சில தினங்களில் நடைபெற்று வீரர்களின் பட்டியலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் கேப்டனாக விளையாட இருக்கும் சூரியகுமார் யாதவ் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இந்திய கேப்டனாக சூரியகுமார் யாதவ் மாபெரும் தடத்தை பதிக்க காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப் போகும் சாதனை யாதெனில் :
இதுவரை ஆசிய கோப்பை தொடர் இரண்டு முறை மட்டுமே டி20 கோப்பைகளாக நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2016-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி டி20 ஆசிய கோப்பைகளிலும், 2022-ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது டி20 வகையிலான ஆசிய கோப்பையிலும் விளையாடி இருந்தது.
இதையும் படிங்க : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவின் சாதனையை தகர்த்த டிம் டேவிட் – விவரம் இதோ
அதனை தொடர்ந்து மூன்றாவது இந்திய கேப்டனாக ஆசிய கோப்பை டி20 வடிவ போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்தப்போகும் மூன்றாவது கேப்டனாக சூரியகுமார் யாதவ் இந்த சாதனையை நிகழ்த்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



