ஆசிய கோப்பை தொடர் நெருங்கிடுச்சி.. ரெடியா இருங்க.. பாண்டியாவுக்கு கட்டளையிட்ட பி.சி.சி.ஐ – விவரம் இதோ

Hardik Pandya
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்திய இந்திய அணியானது தங்களது அடுத்த தொடராக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் இந்த 2025 ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் 9-ஆம் தேதி துவங்கிய செப்டம்பர் 28-ஆம் தேதி நிறைவடைய இருக்கிறது.

ஹார்டிக் பாண்டியாவுக்கு ஆர்டர் போட்ட பி.சி.சி.ஐ :

அதோடு 2026 டி20 உலக கோப்பை நெருங்கி வருவதால் அதனை கருத்தில் கொண்டு இம்முறை 20 ஓவர் போட்டிகளாகவே ஆசிய கோப்பை தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் இந்திய அணியில் இடம்பெறவுள்ள முன்னணி வீரர்கள் அனைவரும் அதற்கு முன்னதாக தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே பல்வேறு வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று தங்களது உடற்தகுதியை நிரூபித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவையும் உடற்தகுதியை நிரூபிக்க பிசிசிஐ கட்டளை போட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெற்று முடிந்த 2024 டி20 உலக கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி என இந்திய அணி பெற்ற அடுத்தடுத்த வெற்றிகளில் ஹார்திக் பாண்டியா முக்கிய பங்கினை வகித்தார். பேட்டிங்கில் அதிரடி காட்டும் அவர் வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்படுவதால் அவரது இடம் இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்று. பலம் வாய்ந்த ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் அவர் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு அவசியம் தேவை.

- Advertisement -

அதனால் ஆகஸ்ட் 11,12 ஆகிய இரு தேதிகளில் அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே பெங்களூரு பயணித்துள்ள ஹார்டிக் பாண்டியா தனது பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் இன்றோ அல்லது நாளையோ தனது உடற்தகுதியை நிரூபித்து விடுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : சுப்மன் கில்லை முன்னிலைப்படுத்த விரும்பி அக்சர் படேலுக்கு துரோகம் செய்ய காத்திருக்கும் பி.சி.சி.ஐ – என்ன நடந்தது?

அப்படி அவர் தனது உடற்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமியும் தடையில்லா சான்றிதழை வழங்கும். அதன்பின்னரே அவர் அதிகாரப்பூர்வமாக ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தேர்வு பட்டியலுக்கு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement