ரோஹித்தின் வார்த்தைகளால் தான் ஜெய்ஸ்வால் தனது முடிவை வாபஸ் பெற்றார் – மும்பை நிர்வாகி வெளியிட்ட தகவல்

Jaiswal and Rohit
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மும்பை அணியில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்திருந்த அவர் தடையில்லா சான்றிதழை வழங்குமாறு மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் வேண்டுகோள் வைத்தார். அதன் பின்னர் கோவா அணிக்கு சென்று விளையாட விரும்புவதாகும் அறிவித்திருந்தார்.

ரோஹித் சர்மாவால் யு டர்ன் அடித்த ஜெய்ஸ்வால் :

ஏனெனில் அவருக்கு கோவா அணி சார்பில் கேப்டன் பதவி வழங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி மும்பையில் இருந்து தனது குடும்பத்தாருடன் கோவா சென்று செட்டில் ஆகவும் ஜெய்ஸ்வால் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அப்படி அவர் தடையில்லா சான்று கேட்ட சில மாதங்களிலேயே மீண்டும் அந்த முடிவை வாபஸ் பெற்றார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து மும்பை அணிக்காகவே விளையாட இருப்பதால் தடையில்லா சான்றிதழை வழங்க வேண்டாம் என்றும் தனது வேண்டுகோளை வாபஸ் பெறுவதாகும் அறிவித்திருந்தார். இப்படி மீண்டும் மும்பை அணிக்காக அவர் விளையாட விருப்பம் தெரிவித்தது கேப்டன் ரோகித் சர்மாவின் அறிவுரைகளால் தான் என மகாராஷ்டிரா கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி அஜின்கியா நாயக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஜெய்ஸ்வால் மும்பை அணியில் இருந்து வெளியேறி கோவா அணிக்காக விளையாட திட்டமிட்டு தடையில்லா சான்றிதழ் கேட்டிருந்தார். அதன் பின்னர் ஜெய்ஸ்வாலை சந்தித்த ரோஹித் அவரிடம் பேசி முடிவை வாபஸ் பெற வைத்தார். அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா அவரிடம் : “நீ மும்பை அணிக்காகத்தான் முதல் முதலில் விளையாட துவங்கினாய்.. இங்கிருந்து தான் உனக்கு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது”.

- Advertisement -

அதுமட்டும் இன்றி மும்பை அணியில் விளையாடுவது சாதாரண விடயம் கிடையாது. இது ஒரு பெருமையும் கௌரவம் வாய்ந்த அணி. 42 முறை ரஞ்சி தொடரை கைப்பற்றிய அணியில் நீ விளையாடி வருகிறாய் இதையெல்லாம் மறந்து விடாதே. அதுமட்டும் இன்றி மும்பை அணியில் நீ விளையாடியதால்தான் உன்னால் படிப்படியாக அடுத்த கட்டத்திற்கு சென்று இன்று இந்திய அணி வரை விளையாட முடிந்துள்ளது என்று தெளிவாக எடுத்துரைத்திருந்தார்.

இதையும் படிங்க : அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் ஆசிய கோப்பைக்கு திரும்புவதற்காக சூரியகுமார் யாதவ் – செய்துள்ள செயல்

அவரது அந்த வார்த்தைகளை கேட்ட பின்னரே ஜெய்ஸ்வால் தனது முடிவை வாபஸ் வாங்கி மீண்டும் மும்பை அணியுடன் இணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது 23 வயதான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 24 டெஸ்ட் போட்டிகள், 1 ஒருநாள் போட்டி மற்றும் 23 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement