அஸ்வின் மாதிரி இந்த திறமையை வளர்க்கலன்னா.. இந்திய அணியில் சான்ஸ் கிடைக்காது.. குல்தீப்புக்கு உத்தப்பா அறிவுரை

Robin Uthappa
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்தியா போராடி சமன் செய்தது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்தியா கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நாளில் நெருப்பாக செயல்பட்ட இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றியைப் பெற்று அனைவரையும் பாராட்ட வைத்தது.

ஒருவேளை அந்தப் போட்டியில் தோற்று இந்தியா தொடரை இழந்திருந்தால் அதற்கு குல்தீப் யாதவ் விளையாடாததே முக்கிய காரணமாக இருந்திருக்கும். ஏனெனில் சைனாமேன் பவுலிங் ஆக்சனைக் கொண்ட அதிரடியாக விளையாடும் இங்கிலாந்துக்கு எதிராக விக்கெட்டுகளை எடுப்பார் என்று பல முன்னாள் வீரர்கள் தெரிவித்தார்கள். எனவே குல்தீப் கண்டிப்பாக இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.

- Advertisement -

அஸ்வின் போல மாறுங்க:

இருப்பினும் பேட்டிங் வரிசையில் ஆழம் வேண்டும் என்பதற்காக இந்திய அணி தொடர்ந்து சுந்தர் மற்றும் ஜடேஜாவை விளையாட வைத்தது. அதனால் கடைசி வரை ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பைப் பெறாத குல்தீப் இங்கிலாந்தில் ஏமாற்றத்தையே சந்தித்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில் குல்தீப் யாதவ் இந்திய அணியில் வாய்ப்பைப் பெற பேட்டிங் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ராபின் உத்தப்பா அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்ற அஸ்வின் 6 டெஸ்ட் சதங்களை அடிக்கும் அளவுக்கு பேட்டிங்கில் திறமை கொண்டிருந்ததாக உத்தப்பா கூறியுள்ளார். அவரைப் போலவே குல்தீப் யாதவும் பேட்டிங் திறமையை வளர்த்தால் மட்டுமே இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று உத்தப்பா அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

உத்தப்பா அறிவுரை:

“குல்தீப்பை பிளேயிங் லெவனில் வைத்து நீங்கள் பேட்டிங் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதை செய்தால் ரசிகர்கள் யாரும் இந்திய அணி நிர்வாகத்தையோ அல்லது கேப்டனையோ விமர்சிக்க மாட்டார்கள். அதே சமயம் குல்தீப் பந்து வீச்சில் உரிய மரியாதையுடைய திறமையைக் கொண்டுள்ளார். ஆனால் அவருடைய பேட்டிங்கில் வரம்புகள் இருக்கின்றன”

இதையும் படிங்க: கிரிக்கெட்டின் கடவுளை ப்ரூக், இங்கிலாந்து இப்படி அவமதித்ததே இந்தியா ஜெய்க்க காரணம்.. அஸ்வின் சாடல்

“அதை முன்னேற்ற அவர் தனது தரப்பில் நிறைய முயற்சிகளை எடுக்க வேண்டும். அஸ்வின் 5 – 6 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். அதே போன்ற ஆட்டத்தை லோயர் மிடில் ஆடர் பேட்டிங் வரிசையில் 8 அல்லது 9 இடங்களில் குல்தீப் யாதவ் வெளிப்படுத்த முடிந்தால், அவரால் இன்னும் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியும்” என்று கூறினார்.

Advertisement