66 ரன்ஸ்.. இங்கிலாந்தை கடுப்பேற்றி கம்பீரையே சிரிக்க வைத்து மாஸ் காட்டிய ஆகாஷ்.. கும்ப்ளேவுக்கு பின் சாதனை

Akash Deep 66
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜூலை 31ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 224 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 52, சாய் சுதர்சன் 38 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கஸ் அட்கின்ஷன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாட முயற்சித்தும் 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 43, ஜாக் கிராவ்லி 64, ஹாரி ப்ரூக் 53 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்ததாக 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு ராகுல் 7, சாய் சுதர்சன் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

ஆகாஷ் தீப் அபாரம்:

இருப்பினும் மறுபுறம் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி சதத்தை அடித்து அசத்தினார். இன்று துவங்கிய 3வது நாள் ஆட்டத்தில் அவருடன் நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய ஆகாஷ் தீப் அபாரமாக விளையாடி இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்தார். சுமாரான பந்துகளில் பவுண்டரிகளை அடித்த அவர் இங்கிலாந்துக்கு ஆச்சரியத்தையும் கொடுத்து ரன்களை சேர்த்தார்.

முதல் ஒரு மணி நேரத்தை அபாரமாக சமாளித்த அவர் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நம்பிக்கை கொடுத்தார். நேரம் செல்ல செல்ல இங்கிலாந்தை கடுப்பேற்றும் வகையில் பேட்டிங் செய்த ஆகாஷ் தீப் இந்தியாவுக்காக கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்து நெஞ்சை நிமிர்த்தி மாஸ் காட்டினார். அதைப் பார்த்து பொதுவாகவே கோபமாக இருக்கக்கூடிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அரிதாக புன்னகைத்தார்.

- Advertisement -

சிறப்பான சாதனை:

கேப்டன் கில் மற்றும் இந்திய அணியினர் வெளியே வந்து கைதட்டி பாராட்டினார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஆகாஷ் தீப் 3வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 66 (94) ரன்களில் அவுட்டாகி ரசிகர்களின் பாராட்டுக்கு மத்தியில் பெவிலியன் திரும்பினார். இதன் வாயிலாக சேனா நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகள் மற்றும் அரை சதத்தை பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையை ஆகாஷ் தீப் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: ஜஸ்ப்ரித் பும்ராவால் டெஸ்டில் இதை செய்ய முடியாதது அவமானம்.. வேற வழியும் இல்ல.. மெக்ராத் பேட்டி

இதே தொடரில் பர்மிங்கம் போட்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்த அவர் தற்போது அரை சதத்தை அடித்துள்ளார். இதற்கு முன் சேட்டன் சர்மா மற்றும் அனில் கும்ப்ளே மட்டுமே அந்த சாதனையைப் படைத்துள்ளார்கள். தொடர்ந்து நடைபெறும் போட்டியில் 3வது நாள் உணவு இடைவேளையில் இந்தியா 189/3 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஜெய்ஸ்வால் 85*, கேப்டன் கில் 11* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement