இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது லண்டன் ஓவல் மைதானத்தில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 224 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்களையும், சாய் சுதர்சன் 38 ரன்களையும் குவித்தனர்.
முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் நிகழ்த்திய சாதனை :
பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியானது 247 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணியானது ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் குவித்துள்ளது.
இதன் காரணமாக தற்போதைய நிலையில் 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணியானது இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர இருக்கிறது. இந்த போட்டியில் இன்னும் மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் வேளையில் நிச்சயம் இந்து போட்டிக்கான முடிவு கிடைத்துவிடும் என்பதனால் இந்த போட்டியானது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக முதல் இன்னிங்சில் பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ஜோடியாக சேர்ந்து இங்கிலாந்து மண்ணில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
அந்த வகையில் இவர்கள் இருவரும் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இங்கிலாந்து மண்ணில் வேகப்பந்து வீச்சாளர்களாக இருவர் இணைந்து ஒரே இன்னிங்சில் எட்டு மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்துவது இது ஐந்தாவது முறை.
இதையும் படிங்க : ஒழுங்கா இருங்க.. நானா இருந்தா ஆகாஷ் தீப்புக்கு முழங்கை வைத்தியம் செஞ்சு விட்ருப்பேன்.. ட்ரெஸ்கோத்திக் எச்சரிக்கை
ஏற்கனவே இந்திய அணி சார்பாக இந்த சாதனையை நான்கு ஜோடிகள் நிகழ்த்தியிருந்த நிலையில் தற்போது ஐந்தாவது வேகப்பந்து ஜோடியாக பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இந்த சாதனையை இங்கிலாந்து மண்ணில் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



