அவங்க இல்லாததால் இந்தியாவை சாய்க்க.. வேற வழியில்லாம இங்கிலாந்து பச்சை பிட்ச்சை போட்ருக்காங்க.. சுனில் கவாஸ்கர்

Sunil Gavaskar 25
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 5வது கடைசி போட்டி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் ஜூலை 31ஆம் தேதி துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட அத்தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. எனவே கடைசிப் போட்டியில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியது.

அந்த சூழ்நிலையில் துவங்கிய கடைசிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதையடுத்து களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் மழையின் குறுக்கீடுகளை தாண்டி 204/6 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 2, ராகுல் 14, கேப்டன் கில் 21, ஜடேஜா 9, துருவ் ஜுரேல் 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

- Advertisement -

இங்கிலாந்தின் பச்சை பிட்ச்:

அதே போல சுதர்சன் 38 ரன்னில் அவுட்டான நிலையில் களத்தில் கருண் நாயர் 52*, வாஷிங்டன் சுந்தர் 19* ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். முன்னதாக இத்தொடரின் முதல் 4 போட்டிகளிலும் புற்கள் இல்லாமல் பிட்ச் சாதாரணமாக இருந்தது என்றே சொல்லலாம். ஆனால் இந்தப் போட்டிக்கான பிட்ச்சில் நிறைய புற்கள் விடப்பட்டுள்ளது.

போதாகுறைக்கு மேகமூட்டத்துடன் கூடிய குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. அதன் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்து மிகப்பெரிய சவாலைக் கொடுப்பதால் பேட்டிங் செய்வது கடினமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் தரமான பவுலர்கள் இல்லாததாலயே இந்தியாவை சாய்க்க இங்கிலாந்து வேறு வழியின்றி பச்சை பிட்ச்சை உருவாக்கியுள்ளதாக சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் சாடல்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து அணியிடம் தரமான பவுலிங் அட்டாக் இல்லை. அதனாலேயே அவர்கள் இது போன்ற பிட்ச்சை உருவாக்கியுள்ளார்கள். இத்தொடரில் பென் ஸ்டோக்ஸ் அதிக விக்கெட்களை எடுத்துள்ளார். ஆர்ச்சர் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பிரைடன் கார்ஸ் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஒருவேளை அந்த மூவரும் காயத்தால் விளையாடாமல் போனால் பின்னர் யார் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பார்கள்?”

இதையும் படிங்க: 3148 நாட்கள் கழித்து கடைசி வாய்ப்பில் சாதித்த கருண் நாயர்.. பாராட்டிய ரூட்.. இங்கிலாந்தை திருப்பி அடிக்குமா இந்தியா?

“அதுவே இங்கிலாந்து இது போன்ற பிட்ச்சை உருவாக்குவதற்கு காரணமாகும். அப்போது தான் ஜோஸ் டாங் உள்ளிட்ட தற்போதைய இங்கிலாந்து அணியில் விளையாடும் பவுலர்களுக்கு உதவி கிடைக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிருந்து போராடி 300க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து நல்ல ஸ்கோரை பதிவு செய்ய முயற்சிக்கவுள்ளது.

Advertisement