இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது கடந்த ஜூலை 23-ஆம் தேதி மென்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் துவங்கி நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது இந்த போட்டியை டிராவில் முடித்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சச்சினின் சாதனையை சமன் செய்த 3 இந்திய வீரர்கள் :
ஏனெனில் இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய இந்திய அணியானது இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 358 ரன்கள் மட்டுமே குவித்தது. ஆனால் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 669 ரன்கள் குவித்தது.
இதன் காரணமாக 311 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது ரன் எதுவும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியை நோக்கி நகர்ந்தது. ஆனால் அதன்பிறகு இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டம் காரணமாக ஐந்தாம் நாளில் 4 விக்கெட்டுகளை இழந்து 425 ரன்கள் குவித்திருந்த வேளையில் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரில் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. ஆனாலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்யலாம் என்பதனால் தற்போது இந்த தொடரானது உயிர்ப்புடன் உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய வீரர்களில் மூன்று பேர் இணைந்து ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் சச்சினுக்கு பிறகு 35 ஆண்டுகால சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளனர். அந்த வகையில் இந்த போட்டியின் போது நிகழ்ந்த சாதனை யாதெனில் : கடந்த 1990-ஆம் ஆண்டு ஓல்டு டிராபோஃர்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 119 ரன்கள் விளாசியிருந்தார்.
இதையும் படிங்க : டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக 4 இந்திய வீரர்கள் சேர்ந்து நிகழ்த்திய மாபெரும் சாதனை – விவரம் இதோ
அதன் பிறகு இத்தனை ஆண்டுகளில் எந்த ஒரு இந்திய வீரரும் இந்த குறிப்பிட்ட மைதானத்தில் சதம் அடித்தது கிடையாது. ஆனால் 35 ஆண்டுகள் கழித்து இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதம் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் அந்த சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



