இங்கிலாந்து அணிக்கு எதிராக மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வரும் நடப்பு ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் தற்போது சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ரிஷப் பண்ட் என்கிட்ட இதைத்தான் சொன்னாரு : ரவி சாஸ்திரி
அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக 133 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் முதல்நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து வீரர் வீசிய பந்தில் காலில் அடி வாங்கிய ரிஷப் பண்ட் மைதானத்திலிருந்து வலியுடன் வெளியேறினார். அதன்பிறகு அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் வலது கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதன் காரணமாக அவர் முதல் இன்னிங்சில் பேட்டிங்கை தொடர மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணிக்கு பெரிய ரன் குவிப்பு அவசியம் என்பதனால் உடைந்த காலையும் பொருட்படுத்தாமல் மைதானத்திற்கு வந்து ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். அவரது இந்த அர்ப்பணிப்பு பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி அவருடன் பேசியது குறித்த சுவாரசிய தகவலை தற்போது பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் இரண்டாம் நாள் ஆட்டத்திற்கு முன்பாக ரிஷப் பண்ட்டிடம் பேசிய போது : உன் கால் விரல் உடைந்து இருக்கிறது தானே? தற்போது எப்படி இருக்கிறது? என்று கேட்டேன்.
இதையும் படிங்க : எனக்கு சுத்தமா மனசு ஏத்துக்கல.. தனது முதல் விக்கெட் குறித்து பேசிய அறிமுகம் வீரர் – அன்ஷுல் கம்போஜ்
அதற்கு அவர் விரல் உடைந்தால் என்ன சார்? நான் இந்திய அணிக்காக நிச்சயம் விளையாடுவேன் என்று கூறினார். அவர் ஒரு அணிக்கான வீரர். டெஸ்ட் விளையாட எப்போதுமே அவருக்கு பிடிக்கும். நாட்டிற்காக அவர் தொடர்ந்து விளையாட விரும்புகிறார் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.



