இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான கே.எல் ராகுல் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார். முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இரண்டு சதங்களை அடித்திருந்த அவர் ஒரு அரசதத்தையும் அடித்து அசத்தலான பார்வை வெளிப்படுத்தியிருந்தார். அதனால் இந்த இங்கிலாந்து தொடரானது அவருக்கு மறக்க முடியாத தொடராக மாறியுள்ளது.
கவாஸ்கருக்கு அடுத்து கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை :
அதனை தொடர்ந்து இன்று ஜூலை 23-ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது மான்செஸ்டர் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியிலும் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய கே.எல் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.
அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த நான்காவது போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது முதல்நாள் ஆட்ட நேரத்தில் நிதானமான ரன் குவிப்பை வழங்கி வருகிறது.
இந்த போட்டியின் போது இந்திய அணியின் முதல் விக்கெட்டாக கே.எல் ராகுல் 46 ரன்கள் எடுத்திருந்த வேளையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறியிருந்தார். இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதம் கடந்து மேலும் ஒரு சதத்தை நோக்கி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் அவர் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.
இருந்தாலும் இந்த போட்டியில் அவர் அடித்த இந்த 46 ரன்கள் மூலம் சுனில் கவாஸ்கருக்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்திய அணியின் துவக்க வீரராக வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்கள் அடித்த துவக்க வீரராக சுனில் கவாஸ்கர் மட்டுமே இதுவரை இருந்து வந்தார்.
இதையும் படிங்க : 5 ஆவது இந்திய வீரராக இங்கிலாந்து மண்ணில் சரித்திர சாதனையை நிகழ்த்திய கே.எல் ராகுல் – விவரம் இதோ
டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக விளையாடிய சுனில் கவாஸ்கர் வெஸ்ட் இண்டிஸ், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அவருக்கு அடுத்து இரண்டாவது இந்திய துவக்க வீரராக தற்போது கே.எல் ராகுல் இங்கிலாந்து மண்ணில் இந்திய துவக்க வீரராக 1000 ரன்களை அடித்து இரண்டாவது இந்திய வீரராக சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.



