5 ஆவது இந்திய வீரராக இங்கிலாந்து மண்ணில் சரித்திர சாதனையை நிகழ்த்திய கே.எல் ராகுல் – விவரம் இதோ

KL Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது இன்று ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

5 ஆவது இந்திய வீரராக கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை :

அதனை தொடர்ந்து தற்போது முதலில் விளையாடி வரும் இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்ஸ்சில் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக துவக்க வீரர்களான கே.எல் ராகுல் 40 ரன்களுடனும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது துவக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் கே.எல் ராகுல் 15 ரன்களை எடுத்திருந்தபோது ஐந்தாவது இந்திய வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை இங்கிலாந்து மண்ணில் நிகழ்த்தி அசத்தியுள்ளார். அது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் கே.எல் ராகுல் 15 ரன்கள் கடக்கும் போது அவர் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை பூர்த்தி செய்தார்.

- Advertisement -

பொதுவாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் பேட்டிங் செய்வது கடினமாக பார்க்கப்படும் வேளையில் சவால் வாய்ந்த இங்கிலாந்து மண்ணில் கே.எல் ராகுல் நிகழ்த்தியுள்ள இந்த சாதனை அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த பட்டியலில் இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் ரன்களை அடித்த இந்திய வீரராக சச்சின் டெண்டுல்கர் 1575 ரன்களுடன் முதலிடத்திலும் உள்ளார்.

இதையும் படிங்க : அவரை எதுக்கு இப்போ டீம்ல சேத்தீங்க.. இந்திய அணித்தேர்வின் மீது ரசிகர்கள் அதிருப்தி – விவரம் இதோ

அவருக்கு அடுத்து ராகுல் டிராவிட் 1376 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், சுனில் கவாஸ்கர் 1152 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், விராட் கோலி 1096 ரன்கள் நான்காவது இடத்தில் இருக்கும் வேளையில் ஐந்தாவது இந்திய வீரராக இங்கிலாந்து மண்ணில் கே.எல் ராகுல் 1000 ரன்களை பூர்த்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement