சி.எஸ்.கே வீரர் அறிமுகம்.. 3 மாற்றங்களுடன் 4 ஆவது போட்டிக்கான இந்திய அணியை அறிவித்த – கேப்டன் கில்

Gill Captain
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் ஏற்கனவே நடைபெற்ற முடிந்துள்ள வேளையில் இந்த தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

4 ஆவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்களது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மூன்று முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக கேப்டன் சுப்மன் கில் டாசின் போது அறிவித்திருந்தார். அந்த வகையில் இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளாகவே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கருண் நாயர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக மூன்றாவது இடத்தில் மீண்டும் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் கடந்த மூன்றாவது போட்டியின் போது காயமடைந்த ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டிக்கு பதிலாக முதல் போட்டியில் விளையாடிய ஷர்துல் தாகூர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அவரை தவிர்த்து ஆகாஷ் தீப் காயம் காரணமாக வெளியேறியுள்ள வேளையில் அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான அன்ஷுல் கம்போஜ்க்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

அதனை தவிர்த்து இந்திய அணியில் வேறுயெந்த மாற்றமும் இல்லை. பெரும்பாலும் 3 ஆவது போட்டியில் ஆடிய வீரர்களே மீண்டும் இந்த போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர். அந்த வகையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : நான் நல்லா தான் பவுலிங் பண்றேன்.. ஆனா நிறைய விக்கெட்ஸ் கிடைக்காததுக்கு இதுதான் காரணம் – முகமது சிராஜ்

1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) கே.எல் ராகுல், 3) சாய் சுதர்சன், 4) சுப்மன் கில், 5) ரிஷப் பண்ட், 6) ரவீந்திர ஜடேஜா, 7) வாஷிங்டன் சுந்தர், 8) ஷர்துல் தாகூர், 9) ஜஸ்ப்ரீத் பும்ரா, 10) அன்ஷுல் கம்போஜ், 11) முகமது சிராஜ்.

Advertisement