இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இங்கிலாந்து அணி இரண்டு வெற்றிகளையும், இந்திய அணி ஒரு வெற்றியையும் பெற்றுள்ள வேளையில் இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
எஞ்சியுள்ள டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறிய முக்கிய வீரர் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து ஒரு முக்கிய வீரர் விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் இங்கிலாந்து அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான சோயப் பஷீர் காயம் காரணமாக அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளார் என நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய சோயிப் பஷீர் முதல் இன்னிங்ஸ்சில் பந்துவீசிய போது அவருக்கு கை விரல் பகுதியில் காயம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து எப்படியோ சமாளித்து இரண்டாம் இன்னிங்சில் பேட்டிங் செய்ய வந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போது பெரியளவில் பந்துவீச முடியவில்லை. இருந்தாலும் இறுதிநேரத்தில் 5.5 ஓவர்கள் வீசிய அவர் சிராஜ் விக்கெட்டை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
இந்நிலையில் மூன்றாவது போட்டி முடிந்த கையோடு தனது காயத்திற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் அவர் எஞ்சியுள்ள கடைசி இரண்டு போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மாற்றுவீரராக 35 வயதான அனுபவ வீரர் லியாம் டாவ்சன் மாற்று வீரராக அந்த அணியில் இடம் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : வாயால் பேசுறத நிறுத்திட்டு.. செயல்ல செய்ஞ்சி காட்டுங்க.. வாஷிங்டன் சுந்தரை விமர்சித்த – டேவிட் லாயிட்
ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் விளையாடியிருந்த அவர் தற்போது அந்த அணியிலிருந்து வெளியேறியுள்ளது ஒரு சிறிய இழப்பு என்றே கூறலாம். 21 வயதான சோயிப் பஷீர் கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 19 போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



