விராட் கோலியை சமன் செய்து கே.ராகுல் மற்றும் புஜாராவை முந்திய ரவீந்திர ஜடேஜா – விவரம் இதோ

Jadeja
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியினை பதிவு செய்து இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றனர்.

விராட் கோலியை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா :

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூலை 10-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய அணியின் வெற்றிக்கு 193 ரன்கள் தேவை என்கிற நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

- Advertisement -

அதேவேளையில் இந்திய அணியை தடுத்து நிறுத்தி வெற்றி பெறும் முனைப்புடன் இங்கிலாந்து அணியும் விளையாடி வருகிறது. அதன் காரணமாக இந்த மூன்றாவது போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 131 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 72 ரன்கள் சேர்த்து அசத்தினார்.

அவர் அடித்த இந்த அரைசதம் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை சமன் செய்ததோடு கே.எல் ராகுல் மற்றும் புஜாரா ஆகியோரையும் பின்னுக்கு தள்ளி ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

இதுவரை இங்கிலாந்து மண்ணில் அதிக அரை சதங்களை டெஸ்ட் போட்டிகளில் அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த விராட் கோலியை அவர் சமன் செய்துள்ளார். விராட் கோலியும், ரகானேவும் இங்கிலாந்து மண்ணில் 8 அரை சதங்களை அடித்திருந்த வேளையில் முதல் இன்னிங்சில் அடித்த அரைசதம் மூலம் ஜடேஜாவும் 8 அரைசதங்களை பதிவுசெய்து அவர்கள் இருவரையும் சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க : இதெல்லாம் போதாது.. அந்த கோட்டைத் தாண்டிய சிராஜுக்கு.. ரபாடா மாதிரி ஐசிசி தடை விதிக்கனும்.. குக் விமர்சனம்

அதுமட்டும் இன்றி கே.எல் ராகுல், புஜாரா ஆகியோர் 6 அரை சதங்களை மட்டுமே அடித்துள்ள வேளையில் அவர்கள் இருவரையும் ஜடேஜா கடந்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்து மண்ணில் 12 அரை சதங்கங்களை அடித்து முதலிடத்திலும், அவருக்கு அடுத்து ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத் ஆகிய மூவரும் 10 அரை சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement