10 ஓவர் கூட தாங்கலன்னா எப்படி? டுக் பந்துகள் பிரச்சனையை தீர்க்க இந்த 2 மாற்றத்தை செய்ங்க.. கும்ப்ளே பரிந்துரை

Anil Kumble
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் தோற்கடித்த இந்தியா பதிலடிக் கொடுத்தது. அடுத்ததாக 3வது போட்டி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 387 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக இங்கிலாந்தில் வேகம், ஸ்விங், ஈரப்பதமான சூழ்நிலைகள் நிலவும். எனவே அங்கே ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் குக்குபரா மற்றும் எஸ்ஜி பந்துகளுக்கு பதிலாக டுக் பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

10 ஓவர் தாங்கலன்னா எப்படி:

ஆனால் சமீப காலங்களாக அந்த பந்து விரைவாக தம்முடைய வடிவம் மற்றும் மென்மையை இழந்து விடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதன் உச்சமாக 3வது போட்டியில் முதல் நாள் மாலையில் மாற்றப்பட்ட புதிய பந்து அடுத்த 10.2 ஓவரில் தனது வடிவத்தையும் மென்மையையும் இழந்தது சர்ச்சையை உண்டாக்கியது. அதற்காக வழங்கப்பட்ட மாற்றுப் பந்தும் அதை விட மோசமாக இருந்தது.

அதனால் அதை இந்திய கேப்டன் சுப்மன் கில் வாங்க மறுத்து நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். அதே போல “ஒரு பந்துகள் 10 ஓவர்கள் கூட தாங்காவிட்டால் முன்னேற்றம் தேவை” என்று முன்னாள் இங்கிலாந்து ஜாம்பவான் பவுலர் ஸ்டுவர்ட் பிராட் ட்விட்டரில் விமர்சித்தார். இந்நிலையில் இந்தப் பிரச்சனைக்கு இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே 2 தீர்வுகளை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கும்ப்ளே 2 தீர்வு:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் மென்மையாகி விட்டது அல்லது மாற்ற வேண்டிய சூழல் வந்து விட்டது என்ற சமயங்களில் மட்டுமே பந்தை மட்டுமே நியாயமானதாகும். ஆனால் தற்போதைய பந்துகள் அடிக்கடி தன்னுடைய வடிவத்தை இழந்து விடுகிறது. எனவே இந்த விஷயத்தில் ஏதாவது செய்தாக வேண்டும். 10 ஓவர்கள் கூட தாங்காமல் மீண்டும் மீண்டும் பந்தை மாற்றுவது நல்ல விஷயம் கிடையாது”

இதையும் படிங்க: இங்கிலாந்து தார் ரோட்டில் அந்த இந்திய பேட்ஸ்மேனுக்கு பவுலிங் போட மாட்டேன்.. அது மிருகத்தனமானது.. ஸ்டார்க்

“அது கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி பந்துக்கும் நல்லதல்ல. இதற்கு 5 வருடங்களுக்கு முன்பாக பயன்படுத்தப்பட்ட டுக் பந்துகளின் வெர்சனை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதே போல பந்தின் மீது சலிவாவை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அது பந்தை சிறந்த முறையில் பளபளப்பாகி ரிவர்ஸ் செய்ய உதவும். இப்போதெல்லாம் நிறைய தருணங்களில் பந்து திரும்புவதை (ரிவர்ஸ்) பார்க்க முடிவதில்லை” என்று கூறினார்.

Advertisement