450 விக்கெட்ஸ்.. ஆஸியின் கமின்ஸை முந்திய ஜஸ்ப்ரித் பும்ரா.. ஜோ ரூட்டை அவுட்டாக்குவதில் உலக சாதனை

Jasprit Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை 2வது போட்டியில் தோற்கடித்த இந்தியா பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது. அடுத்ததாக 3வது போட்டி ஜூலை 19ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி 18, பென் டக்கெட் 23 ரன்களில் நித்திஷ் ரெட்டி வேகத்தில் விக்கெட்டை இழந்தார்கள். மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாட முயற்சித்த ஓலி போப் 44 ரன்களில் ஜடேஜா சுழலில் சிக்கிய நிலையில் ஹாரி ப்ரூக் 11 ரன்களில் பும்ரா வேகத்தில் போல்டானார்.

- Advertisement -

தரமான ரூட்:

இருப்பினும் ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்தனர். அதில் முதல் நாளிலேயே 99 ரன்கள் குவித்த ஜோ ரூட் இன்று தம்முடைய சதத்தை அடித்து அசத்தினார். அவருடன் சேர்ந்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸை 44 ரன்களில் பும்ரா கிளீன் போல்ட்டாக்கினார்.

அடுத்த சில ஓவரில் மறுபுறம் 104 ரன்கள் எடுத்திருந்த ஜோ ரூட்டையும் கிளீன் போல்டாக்கிய அவர் அதற்கடுத்ததாக வந்த கிறிஸ் ஓக்ஸை கோல்டன் டக் அவுட்டாக்கினார். இதையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் ஜோ ரூட்டை 15வது முறையாக ஜஸ்ப்ரித் பும்ரா அவுட்டாக்கியுள்ளார். இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜோ ரூட்டை அதிக முறை அவுட்டாக்கிய பவுலர் என்ற உலக சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார்.

- Advertisement -

பும்ரா உலக சாதனை:

டெஸ்ட் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக ஜோ ரூட் வரலாற்று சாதனை படைத்துள்ளதை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட இங்கிலாந்தின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான அவரை 25 போட்டிகளில் பும்ரா 15 முறை அவுட்டாக்கியுள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸ் 31 போட்டிகளில் 14 முறை ரூட்டை அவுட்டாக்கியதே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: ரூட் இஸ் பேக்.. இங்கிலாந்து அதுல துரோகம் பண்ணிட்டாங்க.. இந்தியா சுருட்டலன்னா வெற்றி கஷ்டம்.. அஸ்வின் கவலை

அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட் தலா 13 முறை ஜோ ரூட்டை அவுட்டாக்கியுள்ளனர். அந்த வகையில் ஜஸ்ப்ரித் பும்ரா தன்னை உலகின் நம்பர் ஒன் பவுலர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இது போக சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஜஸ்ப்ரித் பும்ரா மொத்தம் 450* விக்கெட்டுகளை எடுத்த பெருமையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement