இந்தியாவை அச்சுறுத்த ஒரு முக்கிய மாற்றத்துடன் பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி – லிஸ்ட் இதோ

ENG
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது அவர்களது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி முதல் போட்டிலேயே இந்திய அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.

மூன்றாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஏற்பட்ட மாற்றம் :

அந்த வெற்றியின் காரணமாக 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகித்தது. அதனை தொடர்ந்து பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியினை ருசித்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியும் ஒரு வெற்றியை பெற்றதனால் இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது முதல் இரண்டு போட்டியின் முடிவில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை அடைந்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நாளை ஜூலை 10-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மாலை 3:30 மணிக்கு துவங்க இருக்கிறது.

இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனானது வழக்கம் போலவே முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வெளியான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் ஒரே ஒரு முக்கிய மாற்றத்தை அந்த அணி நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜாஷ் டங் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அனுபவ வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சரை அவர்கள் இணைத்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாகவே காயம் காரணமாக டெஸ்ட் அணிக்கு திரும்ப முடியாமல் இருந்து வந்த ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2021-ஆம் ஆண்டுக்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இதையும் படிங்க : சாய் சுதர்சனால் கருண் நாயருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.. கடைசி சேன்ஸ் இதுதான் – விவரம் இதோ

மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசும் ஜோப்ரா ஆர்ச்சர் நிச்சயம் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்பதனால் அவரை அந்த அணியின் நிர்வாகம் பிளேயிங் லெவனில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றபடி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேறு எந்த மாற்றமும் இல்லை.

Advertisement