கேப்டன்ஷிப் பொறுப்பு கிடையாது.. சுப்மன் கில் திடீர்னு அசத்த இதான் காரணம்.. பேட்டிங் கோச் கோட்டக் பேட்டி

Sittanshu Kottak
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோற்றது. ஆனால் 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரை சமன் செய்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டி ஜூன் 10ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது.

முன்னதாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சுப்மன் கில் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதனால் ரோஹித்துக்கு பின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவரை கேப்டனாக நியமிக்கலாமா? என்ற சில முன்னால் வீரர்கள் விமர்சித்தனர். ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே சதத்தை அடித்த அவர் 2வது போட்டியில் 430 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

கேப்டன்ஷிப் காரணமில்லை:

அந்த வகையில் தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள அவர் இந்தியாவை தலைமைத் தாங்க சரியானவன் என்பதையும் நிரூபித்துள்ளார். அவருடைய இந்த ஆட்டத்திற்கு கேப்டன்ஷிப் பொறுப்பு கிடைத்தது முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய மனநிலையை மாற்றியுள்ளதே சுப்மன் கில் இப்படி அசத்துவதற்கு காரணம் என்று பேட்டிங் பயிற்சியாளர் சிதான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கேப்டன்ஷிப் கிடைத்ததால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று எனக்குத் தோன்றவில்லை. அது மனநிலையால் அதிகம் மாறியுள்ளது என்று நான் கருதுகிறேன். கடந்த ஆஸ்திரேலிய தொடரின் ஆரம்பக்கட்ட போட்டிகளிலும், தற்போதைய இங்கிலாந்து தொடரிலும் அவருடைய மனநிலை நிறைய மாறியுள்ளது”

- Advertisement -

மனமே எல்லாத்துக்கும் காரணம்:

“டெக்னிக்கல் அளவிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தாம் நினைத்த விஷயங்களை அட்ஜஸ்ட் செய்த அவர் மற்ற பேட்ஸ்மேன்களைப் போல அமைதியாக இன்னும் மாற்றங்களை செய்து வருகிறார். தற்போது களத்தில் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்ற மாற்றத்தை மனதளவில் அவர் செய்துள்ளார். அதே போல சுமாரான பந்துகளை பவுண்டரிகளாக மாற்றும் திறனும் அவரிடம் இருக்கிறது”

இதையும் படிங்க: வீக்னெஸ் இல்லாத கில்லை.. ஐபிஎல் மாதிரி அந்த இங்கிலாந்து பவுலர் க்ளீன் போல்ட்டாக்குவாரு.. ப்ராட், பட்லர்

“அவர் 140 – 150 பந்துகளை எதிர்கொண்டால் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்கிறார். மனதளவில் செய்த மாற்றமே அதற்கு அதிகமான காரணம் என்று நான் சொல்வேன். டெக்னிக்கல் அளவில் லேசான மாற்றங்கள் செய்தாலும் மனதளவில் அவர் திடமான மாற்றங்களை செய்துள்ளார். முதல் போட்டியின் 2வது இன்னிங்ஸில் ஆரம்பத்திலேயே ஷாட்டை அடித்து அவுட்டான அவர் தன்னுடைய முதிர்ச்சியற்ற தன்மையை ஒப்புக்கொண்டார். அதனால் முன்னேறிய அவர் அடுத்தப் போட்டியில் செட்டிலாகும் வரை ஒரு ஷாட்டை கூட அடிக்கவில்லை” எனக் கூறினார்.

Advertisement