இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியில் விளையாடியிருந்தார். ஆனாலும் அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. தொடரின் ஆரம்பத்திலேயே இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் பும்ராவின் இருப்பு இந்திய அணிக்கு மிக அவசியமான ஒன்றாக பார்க்கப்பட்டது.
3 ஆவது போட்டியில் பும்ரா விளையாடுவாரா? : சுப்மன் கில் விளக்கம்
ஆனால் ஏற்கனவே இந்த இங்கிலாந்து தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் மூன்று போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று நிர்வாகம் அறிவித்துவிட்டது. ஆனால் அவர் எந்தெந்த போட்டிகளில் ஓய்வெடுக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. ஏற்கனவே இந்திய அணி ஒரு தோல்வியுடன் இரண்டாவது போட்டியில் விளையாடிய வேளையில் பும்ரா அவசியம் இந்திய அணிக்கு தேவை என்ற பேச்செல்லாம் இருந்து வந்தது.
ஆனால் பும்ரா இல்லாமலேயே இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்றுவிட்டது. இதன் காரணமாக மூன்றாவது போட்டியில் மீண்டும் இந்திய அணியில் பும்ரா இடம்பெறுவாரா? அல்லது மூன்றாவது போட்டியிலும் ஓய்வெடுத்துக் கொண்டு நான்கு மற்றும் ஐந்தாவது போட்டியில் விளையாடுவாரா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் கொடுக்கும் விதமாக நேற்றைய இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அடுத்த போட்டியில் பும்ரா விளையாடுவதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : பும்ரா நிச்சயம் அடுத்த போட்டியில் விளையாடுவார். லார்ட்ஸ் டெஸ்ட் என்பது எப்பொழுதுமே ஒரு மிகச் சிறப்பான ஒரு போட்டி. அதில் பும்ரா விளையாட இருக்கிறார்.
இதையும் படிங்க : டிஎன்பிஎல்: 118 ரன்ஸ்.. அஸ்வினின் திண்டுக்கலை ஊதித் தள்ளிய சாய் கிசோரின் திருப்பூர்.. 9 வருட சாதனை வெற்றி
உலகின் மிகச்சிறந்த மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் விளையாட வேண்டும் என்பது அனைவருக்குமே ஒரு கனவாக இருக்கும். அந்த வகையில் இம்முறை நான் அந்த மைதானத்தில் இந்திய அணியின் கேப்டனாக அணியை வழிநடத்த இருப்பது மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.



