இந்திய அணி தாக்கூருடன் சேர்த்து ஜடேஜாவையும் கழற்றி விட்டு.. இந்த 2 பிளேயர்ஸை சேர்க்கனும்.. ப்ராட் ஹடின்

Bradd Haddin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின் தங்கியுள்ளது. அதன் காரணமாக 2வது போட்டியில் இந்திய அணியில் மாற்றங்களை நிகழ்த்துமாறு நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்த தவறிய சர்துல் தாக்கரை நீக்கி விட்டு குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என்பது பலருடைய கோரிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் தம்மைப் பொறுத்த வரை ரவீந்திர ஜடேஜாவை நீக்கி விட்டு குல்தீப் யாதவை கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹடின் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஜடேஜா வெளிநாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

வெளிநாட்டில் ஜடேஜா:

அதே சமயம் தாக்கூருக்கு பதிலாக கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நித்திஷ் ரெட்டியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஹடின் பேசியது பின்வருமாறு. “ரவீந்திர ஜடேஜாவின் சரிவை நாம் பார்க்கிறோமா? அதாவது இந்திய சூழ்நிலைகளில் அவர் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்”

“அவரைப் போன்ற இடது கை ஸ்பின்னருக்கு எதிராக இந்தியாவில் விளையாடுவது மிகவும் கடினம். ஆனால் இந்தத் தொடரில் ஜடேஜா தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆம் அவர் சிறந்த ஆல் ரவுண்டர். இரண்டாவது ஸ்பின்னராக விளையாடினால் அவரால் ஒருபுறத்தை பிடித்து வைக்க முடியும். ஆனால் தற்சமயத்தில் இந்தியா அட்டாக் செய்யும் வகையில் பவுலிங் செய்ய வேண்டியுள்ளது என்று நினைக்கிறேன்”

- Advertisement -

குல்தீப் யாதவ் வேண்டும்:

“எனவே குல்தீப் போன்றவரை நான் விளையாட வைக்க பார்ப்பேன். அட்டாக் செய்யக்கூடிய ஸ்பின்னரான அவர் விக்கெட்டுகளை எடுப்பார். உங்களுக்கு பிடித்து விளையாடக்கூடிய சில பவுலர்கள் தேவை. சிராஜ் அதை செய்வார். இந்திய அணி தங்களுடைய பவுலர்களை தேர்ந்தெடுப்பதில் தைரியமாக செயல்பட வேண்டும்”

இதையும் படிங்க: 97 ரன்ஸ்.. உடைந்த 10க்கு 10 தோல்வி.. கடைசி பந்தில் மாஸ் காட்டிய ஹெட்மையர்.. அமெரிக்காவில் சாதனை சேசிங்

“ஒருவேளை நிதிஷ் ரெட்டி விளையாடினால் இந்தியா ஜடேஜாவை அட்டாக் செய்யும் ஸ்பின்னராக பயன்படுத்த வேண்டிய அவசியம் வராது. இந்த ஒரு விஷயத்தை இந்தியா கவனிக்க வேண்டும். குறிப்பாக வெளிநாட்டில் விளையாடும் போது இதைப் பார்க்க வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி துவங்குகிறது.

Advertisement