தப்பை ஒத்துகிறேன்.. 4 மணி நேரமாகி கெடுப்போக அவங்க தான் காரணம்.. கம்பேக் கொடுப்பேன்.. பிரிதிவி பேட்டி

Prithvi Shaw
- Advertisement -

டெல்லியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா 2018 ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பையை இந்தியாவின் கேப்டனாக வென்றார். அதனால் இந்தியாவுக்காக சீனியர் கிரிக்கெட்டிலும் அறிமுகமான அவர் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதத்தை அடித்தார். அப்படி ஆரம்ப காலங்களில் அசத்தியதால் அவரை சச்சின், சேவாக், லாரா ஆகியோர் கலந்த கலவை என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார்.

ஆனால் அந்த பாராட்டை தக்க வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு நாளடைவில் சுமாராக விளையாடிய பிரிதிவி இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். ஐபிஎல் தொடரிலும் பெரிய ரன்களை எடுக்கத் தவறிய அவரை கடந்த வருடம் அனைத்து அணிகளும் கழற்றி விட்டன. இதற்கிடையே சாலையில் சண்டையில் ஈடுபட்டது உட்பட களத்திற்கு வெளியே அவர் சரியான நன்னடத்தையை பின்பற்றவில்லை.

- Advertisement -

தப்பை ஒத்துக்கிறேன்:

தொடர்ந்து சுமாராகவே விளையாடி வந்த அவரை மும்பை அணியும் உள்ளூர் கிரிக்கெட்டில் கழற்றி விட்டது. மறுபுறம் அவருக்கு போட்டியாக ஜெய்ஸ்வால், அபிஷேக் உள்ளிட்ட ஏராளமான இளம் வீரர்கள் வந்து விட்டார்கள். அதனால் இந்திய அணியில் அவர் மீண்டும் கம்பேக் கொடுப்பது அசாத்தியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமது கேரியரில் இதுவரை செய்த தவறுகளை கொள்வதாக கூறும் பிரித்வி ஷா தவறான நண்பர்களுடன் பழக்கம் வைத்துக் கொண்டது கெட்டுப்போக வழி வகுத்ததாக வருத்தம் தெரிவித்துள்ளார். இங்கிருந்து மனம் தளராமல் போராடி கம்பேக் கொடுப்பேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நிறைய விஷயங்கள் இருந்தன. என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும். அதை புரிந்து கொள்கிறேன்”

- Advertisement -

தவறான நட்பு:

“எனது வாழ்வில் நான் நிறைய தவறான முடிவுகளை எடுத்தேன். குறைவாக கிரிக்கெட்டை விளையாடத் துவங்கினேன். பொதுவாக 8 மணி நேரங்கள் பயிற்சி செய்யக்கூடிய நான் பேட்டிங் செய்து அலுத்துப் போக மாட்டேன். அப்படிப்பட்ட நான் எனது கவனத்தை சிதற விட்டு 4 மணி நேரங்கள் மட்டுமே பயிற்சி எடுப்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் தவறான நண்பர்களை சேர்த்துக் கொண்டேன்”

“கிரிக்கெட்டில் நல்ல காலத்தில் இருந்த போது உருவான நட்பு வட்டாரம் என்னை அங்கேயும் இங்கேயும் அழைத்துச் சென்றனர். இதற்கிடையே குடும்பத்தில் பிரச்சனை வந்தது. என்னுடைய பாட்டன் இயற்கை எய்தினார். அது போல உங்களிடம் சொல்ல முடியாத நிறைய விஷயங்கள் இருக்கிறது. எனது தவறுகளை ஒத்துக் கொள்கிறேன். எப்போதும் என்னுடைய தந்தை ஆதரவாக இருக்கிறார்”

இதையும் படிங்க: 5 விக்கெட் எடுத்தாலும் பெரிய தப்பு.. டேலன்ட்ட வேஸ்ட் பண்ணாதீங்க.. பிரசித் கிருஷ்ணாவுக்கு – இர்பான் பதான் அறிவுரை

“அதனால் தற்போது மீண்டும் களத்திற்கு வந்துள்ள நான் அடிப்படைகளைப் பின்பற்றி 5 வருடத்திற்கு முன்பு செய்த விஷயங்களை செய்யத் வங்கியுள்ளேன். என்னை நம்புகிறேன். அதை மட்டுமே என்னால் செய்ய முடியும். என்னால் மட்டுமே என்னை மீண்டும் கொண்டு வர முடியும் என்று அப்பா கூறியுள்ளார்.” எனக் கூறினார்.

Advertisement