பிளிண்டாப் மற்றும் ஸ்டோக்ஸ்க்கு இணையான சாதனையை இங்கிலாந்து மண்ணில் நிகழ்த்திய – ரிஷப் பண்ட்

Pant and Flintoff
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடியிருந்தாலும் போட்டியின் கடைசி நாளில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இல்லாமல் இந்திய அணி எவ்வாறு செயல்படப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்த முதல் போட்டியில் இந்திய அணி சற்று கலவையான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளது.

பிளிண்டாப் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோரது சாதனையை சமன் செய்த பண்ட் :

இருப்பினும் இந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தாலும் நிறைய பாசிட்டிவான விடயங்கள் உள்ளன. குறிப்பாக பேட்டிங் ஆர்டரில் அனுபவ வீரர்களின் இடத்தை பூர்த்தி செய்யும் அளவிற்கு மிகச் சிறப்பாக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் விளையாடியிருந்தது. அதிலும் குறிப்பாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்டின் ஆட்டம் இந்த போட்டியில் அற்புதமாக இருந்தது.

- Advertisement -

ஏனெனில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில்134 ரன்கள் அடித்த அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போதும் 118 ரன்கள் அடித்து அசத்தினார். இப்படி ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த இரண்டாவது உலகளாவிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவரை நிகழ்த்தினார். அதுமட்டும் இன்றி இந்த ஒரு போட்டியில் அடித்த ரன்களின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்திய அவர் இங்கிலாந்து மண்ணிலும் ஒரு மிக முக்கிய சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.

அதுகுறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ரிஷப் பண்ட் செய்த சாதனை யாதெனில் : இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்களாக அந்த அணியை சேர்ந்த முன்னாள் வீரரான ஆண்ட்ரு பிளிண்டாப் மற்றும் தற்போதைய கேப்டனான பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவர் மட்டுமே இருக்கின்றனர்.

- Advertisement -

அவர்கள் இருவரும் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் ஒரு ஆட்டத்தில் 9 சிக்ஸர்களை அதிகபட்சமாக விளாசியுள்ளனர். இந்நிலையில் அவர்களது இந்த சாதனையை தான் ரிஷப் பண்ட் தற்போது சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க : காட்டிய பயம் பத்தலையா? கம்பேக் இந்தியா 4 – 0ன்னு தோற்கும்.. வாசிம் ஜாபரை கிண்டல் செய்த மைக்கேல் வாகன்

அதாவது நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் 6 சிக்ஸர்களை விளாசிய அவர் இரண்டாவது இன்னிங்ஸின் போதும் 3 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் ஒரு ஆட்டத்தில் 9 சிக்ஸர்களை அடித்து ஆண்ட்ரு பிளிண்டாப் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோரது சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement