பந்துக்கு ரெஸ்பெக்ட் குடுத்து விளையாடுற அந்த மைன்ட் செட் தான் கே.எல் ராகுலின் சக்ஸஸ்க்கு காரணம் – ஹேமங் பதானி

Badani and KL
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடும் இந்திய அணியின் அனுபவ வீரரான கே.எல் ராகுல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு நம்பிக்கை சேர்த்துள்ளார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 78 பந்துகளை சந்தித்த கே.எல் ராகுல் 8 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸ்சின் போது அட்டகாசமாக பேட்டிங்கை துவங்கிய அவர் அரைசதம் கூட அடிக்காமல் வெளியேறியது ஏமாற்றத்தை அளித்தது.

கே.எல் ராகுல் அப்படியே முரளி விஜய் மாதிரி ஆடுறாரு : ஹேமங் பதானி

இருந்தாலும் இரண்டாவது இன்னிங்சின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 247 பந்துகளை சந்தித்து 18 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் குவித்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 364 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 371 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

- Advertisement -

இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியில் கே.எல் ராகுல் மட்டுமே தற்போது மூத்த வீரராக இருக்கும் வேளையில் அவரது இந்த பொறுப்பான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராக களமிறங்கி சதம் விளாசிய கே.எல் ராகுலை முன்னாள் இந்திய வீரரும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஹேமங் பதானி பாராட்டி இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை கே.எல் ராகுலை நான் முரளி விஜய்யுடன் ஒப்பிட விரும்புகிறேன். ஏனென்றால் முரளி விஜய் போன்றே கே.எல் ராகுலும் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும், விட வேண்டிய பந்துகளை கீப்பருக்கு விட்டும் விளையாடுகிறார். ஒரு கட்டத்தில் கே.எல் ராகுல் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது என்னை மறந்து நான் முரளி விஜய் பேட்டிங் செய்கிறாரோ என்று நினைத்தேன்.

- Advertisement -

அந்த அளவிற்கு கே.எல் ராகுலின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. இந்திய வீரர்கள் அனைவருமே ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவிட்டு வருவதால் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த பந்தையும் அடிக்கும் முனைப்புடன் விளையாடுகிறார்கள். ஆனால் கே.எல் ராகுல் அப்படி ஏதும் செய்யாமல் முறைப்படி டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டுமோ அதைப் போன்று பந்துகளுக்கு மரியாதை கொடுத்து விளையாடுகிறார்.

இந்த போட்டியின் முதல் இரண்டு மணி நேரம் ஃபுல் ஷாட், கட் என எந்த வகையான ஷாட்களையும் விளையாடாமல் தன்னை நோக்கி நேராக வரும் பந்துகளை மட்டுமே விளையாடி புதிய பந்தை பழையதாக மாற்றும் வேலையில் கே.எல் ராகுல் ஈடுபட்டார். அதன்பிறகு பந்து பழையதானதும் அவர் சதம் அடிப்பது எளிமையாக மாறியது.

இதையும் படிங்க : உலகின் முதல் வீரராக டி20 போட்டிகளில் இமாலய சாதனையை நிகழ்த்திய கைரன் பொல்லார்டு – விவரம் இதோ

உண்மையிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அறிந்து பந்துகளுக்கு மரியாதை கொடுத்து கே.எல் ராகுல் விளையாடுகிறார். இந்த தொடரில் இதுபோன்ற பல இன்னிங்ஸ்கள் அவரிடம் இருந்து வரும் என்றும் ஹேமங் பதானி பார்ட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement