விராட், ரோஹித், அஸ்வின் இல்லன்னு புலம்பாதீங்க.. அவர் ஒருத்தரே நிறைய தொல்லை கொடுப்பாரு.. பென் ஸ்டோக்ஸ்

Ben Stokes 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஜூன் 20ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடர் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது. அந்தத் தொடருக்கு முன்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட சீனியர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெற்றார்கள்.

அதனால் இம்முறை சுப்மன் கில் தலைமையில் குறைந்த அனுபவத்துடன் களமிறங்கும் இளம் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெறுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடிக்கடி விராட், ரோஹித், அஸ்வின் இல்லை என்று சொல்லி புலம்பாதீர்கள் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். ஏனெனில் அவர்களைத் தாண்டி இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுக்க இந்தியாவிடம் திறமையான வீரர்கள் இருப்பதாகவும் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

சும்மா புலம்பாதீங்க:

குறிப்பாக ஜஸ்ப்ரித் பும்ரா தனியாளாக தங்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுப்பார் என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்தியாளரின் கேள்விக்கு அவர் கொஞ்சம் காட்டமாக பதில் கொடுத்தது பின்வருமாறு. “ரோகித், விராட், அஸ்வின் இல்லை என்பது பற்றி போதுமான அளவுக்கு சொல்லி முடித்தாகி விட்டது. அவர்கள் இல்லை என்பதற்காக நாங்கள் இந்தியாவை எளிதாக எடுத்துக் கொள்வோம் என்று அர்த்தமில்லை”

“ஏனெனில் இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் திறமை அபரிதமானது. விராட், ரோஹித், அஸ்வின் ஆகியோர் தங்களுடைய நாட்டுக்காக களத்தில் சிறந்த விஷயங்களைச் செய்தார்கள். அதற்காக அவர்களது இடத்தை மற்றவர்களால் நிரப்ப முடியாது என்று அர்த்தமில்லை. ஐபிஎல் தொடரில் நிறைய விளையாடியுள்ளதால் இந்தியாவின் திறமை என்ன என்பது எனக்குத் தெரியும்”

- Advertisement -

ஜஸ்ப்ரித் பும்ரா போதும்:

“தங்களுடைய நாட்டுக்காக அற்புதங்களை செய்த அந்த 3 பெரிய பெயர்கள் இல்லாததால் எங்களுடைய வேலை எளிதாகி விடும் என்று அர்த்தமல்ல. ஜஸ்ப்ரித் பும்ரா உலகம் முழுவதிலும் அசத்தக்கூடிய அற்புதமான பவுலர் என்பதை நாம் அறிவோம். எங்கே சென்றாலும் அவர் அசத்தக்கூடியவர் என்பதை அவருடைய ரெக்கார்ட் காண்பிக்கிறது”

இதையும் படிங்க: உலகத்தைப் பற்றி கவலைப்படாம.. இந்தியாவுக்காக இதை செய்ங்க.. கேப்டன் சுப்மன் கில்லுக்கு சச்சின் அட்வைஸ்

“எனவே பும்ரா மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுக்கக் கூடியவர் என்பது எங்களுக்குத் தெரியும். அதே சமயம் மற்ற இந்திய பவுலர்களும் அச்சிறுத்தலைப் கொடுப்பார்கள். அதனால் நாங்கள் தனிப்பட்ட நபர் மீது நாங்கள் கவனத்தைச் செலுத்தப் போவதில்லை. அதே சமயம் நாங்கள் எதிரணியை மதிக்கிறோம். ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் சிறப்பான பவுலர்” என்று கூறினார்.

Advertisement