பட்டோடியின் மரியாதையை மீட்டு வாங்கிய சச்சின்.. பிசிசிஐயிடம் பெருந்தன்மையை உச்சத்தை காட்டிய தகவல்

Sachin Tendulkar
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடர் டெண்டுல்கர் – ஆண்டர்சன் கோப்பை என்ற பெயரில் அழைக்கப்படும் என்று இங்கிலாந்து வாரியம் அறிவித்துள்ளது.

இதுவரை இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடிய தொடர்கள் பட்டோடி கோப்பை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. அதாவது இப்திகார் அலி கான் பட்டோடி மற்றும் அவருடைய மகன் மன்சூர் அலிகான் பட்டோடி ஆகியோர் இந்தியாவின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஆரம்பக் காலங்களில் இந்தியா – இங்கிலாந்து ஆகிய 2 அணிகளுக்காகவும் விளையாடி நிறைய பெருமையும் பங்கையும் சேர்த்தவர்கள்.

- Advertisement -

சச்சினின் பெருந்தன்மை:

அதைப் போற்றும் வகையில் 2007 முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்திய தொடர்கள் பட்டோடி கோப்பை என்றழைக்கப்படும் இங்கிலாந்து அந்நாட்டு வாரியம் அறிவித்திருந்தது. இருப்பினும் தற்போது அந்தக் கோப்பையை சச்சின் – ஆண்டர்சன் பெயரில் இங்கிலாந்து வாரியம் மாற்றியுள்ளது. பார்டர் – கவாஸ்கர் கோப்பை போல டெண்டுல்கர் – ஆண்டர்சன் பெயரில் தொடர் நடைபெற்றால் சிறப்பாக இருக்கும் என்று இங்கிலாந்து வாரியம் கருதுகிறது.

எனவே இந்த வருடத்திலிருந்து பட்டோடி கோப்பை கைவிடப்பட்டு டெண்டுல்கர் – ஆண்டர்சன் கோப்பை அறிமுகப்படுத்தப்படுவதாக இங்கிலாந்து வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பட்டோடி அவர்களின் பெயரை தொடரிலிருந்து நீக்க வேண்டாம் என்று இங்கிலாந்து வாரியத்திடம் சச்சின் டெண்டுல்கர் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

தொடரும் பட்டோடியின் பெருமை:

அவருடைய கோரிக்கைக்கு ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆதரவளித்துள்ளதாகவும் தெரிய வருகிறது. எனவே அதை ஏற்றுக் கொண்ட இங்கிலாந்து வாரியம் தொடரை வெல்லும் கேப்டனுக்கு பட்டோடி என்று பெயரில் புதிய மெடலை பரிசாக வழங்க முடிவெடுத்துள்ளது. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி கூறியது பின்வருமாறு. “சச்சின் இங்கிலாந்து வாரியத்தை அணுகி இந்தியா – இங்கிலாந்து தொடரில் பட்டோடி அவர்களின் பெயர் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்”

இதையும் படிங்க: ஸ்ரேயாஸை மிஸ்.. இத்தனை திறமையை வெச்சுருக்கும் சுதர்சன் இங்கிலாந்தில் சொல்லி அடிப்பாரு.. நிக் நைட்

“மிஸ்டர். ஜெய் ஷா அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இங்கிலாந்து வாரியம் பட்டோடி மெடலை வெற்றி கேப்டனுக்கு பரிசாக வழங்க உள்ளது” என்று கூறினார். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரின் பெருந்தன்மையால் இந்தியா – இங்கிலாந்து தொடரில் பட்டோடி பெயர் காலத்தால் தவறிப்போகாமல் மீட்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement