மெக்ராத் மாதிரி இந்த திறமை கொண்டுள்ள பும்ரா.. 160 கி.மீ சோயப் அக்தரை விட பெஸ்ட்.. ஸ்டுவர்ட் ப்ராட்

Stuart Broad
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் ஜஸப்ரித் பும்ரா இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றுவார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். ஏனெனில் ஐசிசி தர வரிசையில் உலகில் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக ஜொலிக்கும் அவர் கடந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு அதனுடைய சொந்த மண்ணில் சிம்ம சொப்பனமாக செயல்பட்டார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் கிளன் மெக்ராத் டெலிவரி ஸ்ட்ரைட் (ஓடி வந்து பந்து வீசும் முறை) போல ஜஸ்ப்ரித் பும்ரா பவுலிங் இருப்பதாக இங்கிலாந்து ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். மேலும் 160 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய சோயப் அக்தரை விட பும்ராவின் பந்துகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

மெக்ராத் போல பும்ரா:

“தற்சமயத்தில் பும்ரா உலகின் சிறந்த பவுலராக இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் அதை ஆஸ்திரேலியாவில் காண்பித்தார். இங்கிலாந்து போன்ற சூழ்நிலைகளில் அவர் மிகவும் ஆபத்தானவர். பொறுமையான அவர் தன்னிடம் அற்புதமான போட்டித் தன்மையை கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் கடைசிப் போட்டியில் சாம் கோன்ஸ்டஸ்க்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடினார்”

“நாளின் இறுதியில் கடைசி ஓவரில் கவாஜா அவுட்டான பின் அவரை நோக்கி பும்ரா கர்ஜித்தார். அவரிடம் இருப்பது போன்ற உணர்வு ஒவ்வொரு நல்ல வேகப்பந்து வீச்சாளர்களிடமும் இருக்கும். மிகவும் கூர்மையாக போட்டியிடும் தன்மையைக் கொண்ட அவர் விராட் கோலியின் தலைமையில் வளர்ந்தார். விராட் கோலி தம்முடைய அனைத்து வீரர்களையும் போட்டி தன்மையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்”

- Advertisement -

ப்ராட் பாராட்டு:

“அப்படிப்பட்ட பும்ரா 5 போட்டிகளிலும் விளையாடுவதை இங்கிலாந்து அணி விரும்பாது. ஏனெனில் 5 போட்டிகளிலும் விளையாடினால் அவர் நிறைய விக்கெட்டுகளை எடுப்பார். அமைதியாக மிகவும் குறைந்த தூரத்திலிருந்து ஓடி வரும் அவர் 70 மைல் வேகத்தில் வீசுவது போல தெரியும். ஆனால் அவரது பந்துகள் உங்களை 90 மைல் வேகத்தில் அடிக்கும். சோயப் அக்தரை எதிர்கொண்ட போது அவர் எனக்கு எதிராக 100 மைல் வேகத்தில் வீசுனார்”

இதையும் படிங்க: இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்த ரவி சாஸ்திரி – லிஸ்ட் இதோ

“அதற்கு நீங்கள் தயாராக இருப்பீர்கள். ஆனால் பும்ரா மிகவும் சமநிலையுடன் குறைந்த தூரத்தில் ஓடி வந்து பௌலிங் செய்வார். அவருடைய பந்து வீச்சில் நீண்ட தூரம் அல்லது சமநிலையற்ற நிலை இருக்காது. நான் பார்த்ததில்லையே கிளன் மெக்ராத் மிகவும் சமநிலையான டெலிவரி ஸ்ட்ரைடடை கொண்டவர். பும்ராவும் அதே போன்றவர். அவர் சமநிலையுடன் தன்னுடைய மணிக்கட்டை பயன்படுத்தி பந்தை உள்ளே வெளியே ஸ்விங் செய்வார்” எனக் கூறினார்.

Advertisement