ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை வரும் செப்டம்பர் மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. 1973 முதல் நடைபெற்று வரும் அந்த உலகக் கோப்பையில் இந்தியா ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வரலாற்றில் 13வது முறையாக இம்முறை ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் பெரும்பாலான போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகிறது.
அந்தத் தொடரில் களமிறங்கி இந்தியா முதல் முறையாக கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. இந்நிலையில் அத்தொடருக்கான முழு அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன் படி செப்டம்பர் 30ஆம் தேதி ஐசிசி மகளிர் 2025 உலகக் கோப்பை இந்தியாவில் உள்ள பெங்களூரு நகரில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவணை வெளியீடு:
அந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா உட்பட உலகின் டாப் 8 கிரிக்கெட் அணிகள் விளையாடுகின்றன. அந்த 8 அணிகளும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் செமி ஃபைனலுக்குத் தகுதி பெறும். அதைத்தொடர்ந்து முதல் செமி ஃபைனல் அக்டோபர் 29ஆம் தேதி கொழும்பு அல்லது பெங்களூருவில் நடைபெறும்.
குறிப்பாக பாகிஸ்தான் அரையிறுதிக்கு வந்தால் அப்போட்டி கொழும்புவில் நடைபெறும். இந்தியா உட்பட மற்ற அணிகள் வந்தால் அப்போட்டி பெங்களூருவில் நடைபெறும் 2வது செமி ஃபைனல் அக்டோபர் 30ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாபெரும் இறுதிப்போட்டி வரும் நவம்பர் 2ஆம் தேதி அதே நிபந்தனையுடன் பெங்களூரு அல்லது கொழும்புவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அட்டவணை:
அந்த வகையில் இத்தொடர் முழுவதும் பெங்களூரு, கௌஹாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், கொழும்பு ஆகிய 5 மைதானங்களில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் விளையாடும் இந்திய அணியின் அட்டவணை (அனைத்துப் போட்டிகளும் மதியம் 3:00 மணிக்கு துவங்கும்):
செப்டம்பர் 29: இந்தியா – இலங்கை, பெங்களூரு
அக்டோபர் 5: இந்தியா – பாகிஸ்தான், கொழும்பு
அக்டோபர் 9: இந்தியா- தென் ஆப்பிரிக்கா, விசாகப்பட்டினம்
இதையும் படிங்க: சச்சினை விட கோலிக்கு பவுலிங் செய்ய கஷ்டபட்டேன்.. 4 வருடத்தில் திருப்பி அடிச்சாரு.. ஆண்டர்சன் பேட்டி
அக்டோபர் 12: இந்தியா – ஆஸ்திரேலியா, விசாகப்பட்டினம்
அக்டோபர் 19: இந்தியா – இங்கிலாந்து, இந்தூர்
அக்டோபர் 23: இந்தியா- நியூஸிலாந்து, கௌகாத்தி
அக்டோபர் 26: இந்தியா – வங்கதேசம், பெங்களூரு



