இப்படி ஒரு விடயத்தை கனவிலும் எதிர்பார்க்கவில்லை.. மனம்திறந்து பேசிய சுப்மன் கில் – விவரம் இதோ

Shubman Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் அனுபவ வீரரான விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவர்கள் இருவருக்கு பதிலாக அணியில் இணையப்போகும் வீரர்கள் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.

இதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை : சுப்மன் கில்

அதேவேளையில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக இளம் வீரரான சுப்மன் கில் அறிவிக்கப்பட்டது அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் பும்ரா, கே.எல் ராகுல், ரிஷப் பண்ட் போன்ற அனுபவ வீரர்கள் இருக்கும் வேளையில் அவர்களை தாண்டி மிகவும் இளம் வயது வீரரான சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டது அனைவரையும் வியக்க வைத்திருந்தது.

- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்து நாட்டிற்கு சென்றடைந்து தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையான முதல் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக்குடன் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பங்கேற்று அதில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பல்வேறு வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக வருவேன் என்று கனவிலும் நினைத்தது கிடையாது. எனக்கும் சரி, என் தந்தைக்கும் சரி நான் ஒரு கிரிக்கெட் வீரராக வருவேன் என்று மட்டுமே நினைத்தோம். ஆனால் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக வருவேன் என்று நாங்கள் நினைத்தது கூட கிடையாது. என்னை புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்போகிறார்கள் என்று எனக்கு முன்பே தெரியும்.

- Advertisement -

ஆனால் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாக வேண்டும் என்று காத்திருந்தேன். ஒருநாள் என்னை டெஸ்ட் கேப்டனாக அறிவித்ததும் என் தந்தை என்னை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். எனக்கு கிடைத்த இந்த கௌரவம் மிகப்பெரிய விடயம். நான் கேப்டனான பின்னர் அஜித் அகார்கரும், கம்பீரும் என்னிடம் நீண்ட நேரம் பேசினார்கள்.

இதையும் படிங்க : 21 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த டெஸ்ட் அணி இதுதான்.. பிளேயிங் லெவனை தேர்வுசெய்த வில்லியம்சன் – லிஸ்ட் இதோ

என்னுடைய இயல்பான குணத்தை மைதானத்தில் வெளிப்படுத்துமாறு ஆலோசனைகளை தெரிவித்திருந்தனர். அதுமட்டுமின்றி அவர்கள் என்னிடம் எந்த ஒரு விடயத்தையும் பெரிய அளவில் எதிர்பார்க்காமல், நெருக்கடியின்றி செயல்படுமாறும் கூறினார்கள் என சுப்மன் கில் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement