சச்சின் டெண்டுல்கர் என்னைக்குமே லெஜெண்ட்.. அவரோட கெளரவம் கிடைச்சது நம்ப முடியல.. ஆண்டர்சன் மகிழ்ச்சி

James Anderson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் சுப்மன் கில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது. எனவே வலுவான இங்கிலாந்துக்கு அதனுடைய சொந்த மண்ணில் சவாலைக் கொடுத்து இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இதற்கிடையே அத்தொடர் டெண்டுல்கர் – ஆண்டர்சன் கோப்பை என்ற பெயரில் மாற்றப்படுவதாக இங்கிலாந்து வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு முன் பட்டோடி கோப்பை என்ற பெயரில் விளையாடப்பட்டு வந்த அத்தொடர் தற்போது சச்சின் – ஆண்டர்சன் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. சர்வதேச மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள சச்சின் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

ஜாம்பவான் சச்சினுடன்:

அதே போல ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக உலக சாதனை படைத்து இங்கிலாந்தின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அவர்கள் இருவருமே அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய டாப் 2 வீரர்களாக உலக சாதனை படைத்துள்ளனர். எனவே அவர்களுடைய பெயரில் இங்கிலாந்து மண்ணில் இந்தியா பங்கேற்கும் டெஸ்ட் தொடர் அழைக்கப்பட உள்ளது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் அன்றும் இன்றும் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை பார்த்து வளர்ந்ததாக ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட அவருடன் கோப்பையில் தம்முடைய பெயரை பகிர்ந்து கொண்டுள்ளது மிகப்பெரிய கௌரவம் என்றும் ஆண்டர்சன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது மிகப்பெரிய கௌரவம். இன்னும் என்னால் அதை நம்ப முடியவில்லை”

- Advertisement -

இன்னும் நம்ப முடியல:

“நான் வளரும் போது சச்சினை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவன். இந்த கோப்பையால் அவரது வயதுக்கு ஏற்ப எந்த அவமானத்தையும் செய்ய விரும்பவில்லை. கிரிக்கெட்டின் அற்புதமான லெஜெண்டான அவரைப் பார்த்து அவருக்கு எதிராக நிறைய விளையாடியது நினைவிருக்கிறது. எனவே இந்தக் கோப்பையை கொண்டிருப்பது மிகப்பெரிய கௌரவம். இதற்கு மேல் என்னால் பெருமைப்பட முடியாது”

இதையும் படிங்க: என்னுடைய கேப்டன்சி இவ்ளோ சூப்பரா இருக்க காரணமே இதுதான்.. சீக்ரெட்டை ஓபன் செய்த – ஷ்ரேயாஸ் ஐயர்

“இந்தியாவுக்கு எதிராக விளையாடியதில் எனக்கு நிறைய நினைவுகள் இருக்கிறது. ஆஷஸ் தொடருக்குப் பின் இந்தியாவுக்கு எதிரான தொடர்கள் இங்கிலாந்து எதிர்பார்க்கக்கூடிய ஒன்று. இந்தியாவில் விளையாடிய போது எனக்கு கடினமான நேரங்கள் இருந்தன. அங்கே வென்றது மிகவும் ஸ்பெஷலான தருணம். இந்திய அணியில் மிகவும் அற்புதமான வீரர்கள் இருந்தார்கள்” என்று கூறினார்.

Advertisement