அந்த ஒரு கால் வந்தா இந்திய அணிக்காக நான் மீண்டும் விளையாட ரெடி – புஜாரா வெளிப்படை

pujara
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாரா கடந்த 2010 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 103 போட்டிகளில் விளையாடி 19 சதம் மற்றும் 35 அரைசதம் என 7195 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பல ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்த இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது.

இப்போதும் நான் அவங்க கூப்டா கம்பேக் கொடுக்க ரெடி : புஜாரா

அதிலும் குறிப்பாக 2023 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் வாய்ப்பின்றி தவிக்கும் அவர் தற்போது 37 வயதை எட்டி உள்ளதால் இனியும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் அவரது டெஸ்ட் கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் இன்றளவும் தனது முயற்சியை கைவிடாது தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் சத்தீஸ்வர் புஜாரா எப்போது எனக்கு இந்திய அணியில் இருந்து அழைப்பு வந்தாலும் நான் விளையாட தயாராக இருக்கிறேன். அதற்கான எல்லா தகுதியும் எனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

இதுவரை இங்கிலாந்து செல்லும் தொடருக்கான இந்திய அணியில் என்னை அழைக்கவில்லை. இனிமேலும் அழைப்பார்கள் என்ற உறுதி கிடையாது. ஆனால் அதே சமயத்தில் நிர்வாகம் மற்றும் கம்பீரிடம் இருந்து எனக்கு ஒரு போன் கால் வந்தால் நிச்சயம் அவர்களது அழைப்பை ஏற்று இந்திய அணிக்காக மீண்டும் விளையாட தயாராக இருக்கிறேன்.

- Advertisement -

தற்போது நான் உடலளவிலும், மனதளவிலும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். அதுமட்டும் இன்றி பேட்டிங் பயிற்சியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். எனவே எப்போது எனக்கு அழைப்பு வந்தாலும் இந்திய அணிக்கு திரும்பும் நோக்கில் நான் என்னை தயார்படுத்தி வருகிறேன்.

இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவருக்கு பிளேயிங் லெவனில் சேன்ஸ் குடுங்க – ரிக்கி பாண்டிங் ஆதரவு

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை நான் இன்னும் எனது கரியர் முடிவுக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். அதன் காரணமாகவே தொடர்ந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் நோக்குடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன் என புஜாரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement