என்னோட கிரிக்கெட் கேரியரை 2 மஹேந்திராக்கள் உருவாக்குனாங்க.. அதுல ஒன்னு தோனி.. ஜடேஜா நெகிழ்ச்சி

Ravindra Jadeja
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டராக விளையாடி வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசையில் நீண்ட நாட்கள் உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் இடத்தைப் பிடித்த வீரராக ரவீந்திர ஜடேஜா உலக சாதனை படைத்துள்ளார். அந்தளவுக்கு டெஸ்ட் போட்டிகளில் அவர் இந்தியாவின் மேட்ச் வின்னராக செயல்பட்டு வருகிறார்.

2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் தங்க பந்து விருதை வென்ற ஜடேஜா அதிக விக்கெட்டுகள் எடுத்து தோனி தலைமையில் இந்தியா கோப்பை வெல்ல உதவினார். 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பைகளையும் அவர் இந்தியா வெல்வதற்கு உதவினார். மொத்தத்தில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்காக அசத்தி வரும் ஜடேஜா ரசிகர்களிடம் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

- Advertisement -

2 மஹேந்திராக்கள்:

இது போக ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 2018, 2021, 2023 ஆகிய 3 கோப்பைகளை வெல்வதற்கும் ஜடேஜா முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2023 இறுதிப் போட்டியில் கடைசி 2 பந்துகளில் சிக்சர், பவுண்டரி அடித்த ஜடேஜா கொடுத்த ஃபினிஷிங்கை மறக்க முடியாது. அவரை தோனி இடுப்பில் தூக்கி வைத்து கொண்டாடியதை சிஎஸ்கே ரசிகர்களால் நினைக்காமல் இருக்க முடியாது.

இந்நிலையில் தமக்கு கிரிக்கெட் கேரியரை 2 மகேந்திராக்கள் உருவாக்கியதாக ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார். அதில் ஒருவர் தம்முடைய பயிற்சியாளர் மகேந்திர சௌஹான், மற்றொருவர் மகேந்திர சிங் தோனி என்று ஜடேஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஜடேஜா நெகிழ்ச்சி:

“என்னுடைய கிரிக்கெட் பயணம் 2 மகேந்திராக்களுக்கு மத்தியில் இருக்கிறது. ஒருவர் மகேந்திர சிங் சௌஹான், மற்றொருவர் மகேந்திர சிங் தோனி. ஜம்நகரில் கிரிக்கெட் பங்களா என்ற இடத்தில் நான் 8 – 9 வயதில் கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கினேன். பீகாரைச் சேர்ந்த என்னுடைய பயிற்சியாளர் சௌஹான் இப்போதும் அங்கே பயிற்சியாளராக இருக்கிறார்”

இதையும் படிங்க: 14 வயதிலிருந்து தெரிந்த நண்பன் கில்.. இந்தியாவுக்காக இந்த சாதனை படைத்ததில் எனக்கும் பெருமை.. அபிஷேக் பேட்டி

“இந்த விஷயத்தை மஹி பாயிடமும் நான் கூறியுள்ளேன். முன்னாள் காவல்துறை அதிகாரியான என்னுடைய பயிற்சியாளர் ஒரு விளையாட்டு வீரர் எப்போதும் ஃபிட்னஸில் உச்சமாக இருக்க வேண்டும் என்ற மனநிலையைக் கொண்டவர். அவர் பேட்டிங், பவுலிங் செய்து விடலாம் ஆனால் நிறைய ஓடுவது கடினம் என்று நம்பினார். அவருடைய வழி காட்டுதலில் ஜம்நகரில் நான் 15 – 20 கி.மீ ஓடிப் பயிற்சிகளை எடுப்பேன். தோனியின் மகத்துவம் பற்றி சொல்ல ஒரு வார்த்தையில்லை. அவர் அனைவருக்கும் மேல இருப்பார்” என்று கூறினார்.

Advertisement