இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வெல்ல அவர் மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக அந்த 2 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த கம்பீர் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
மேலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி மேட்ச் வின்னராக செயல்பட்ட அவர் கேப்டனாக 2 ஐபிஎல் கோப்பைகளையும் பெற்றுள்ளார். அப்படிப்பட்ட அவருக்கு இந்தியாவை தலைமை தாங்கும் கேப்டன்ஷிப் பொறுப்பு பெரிதாக கிடைக்கவில்லை. 2011ஆம் ஆண்டு தோனி ஓய்வெடுத்த போது நியூசிலாந்துக்கு ஒருநாள் எதிரான தொடரில் கௌதம் கம்பீர் கேப்டனாக செயல்பட்டார்.
எந்த வருத்தமும் இல்ல:
அந்தத் தொடரில் கம்பீர் தலைமையில் இந்தியா 5 – 0 (5) என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒய்ட்வாஷ் செய்து அட்டகாசமான வெற்றி பெற்றது. அதைத் தவிர்த்து இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு கிடைக்காததற்காக தாம் எப்போதும் வருத்தப்பட்டதில்லை என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
ஏனெனில் அதை விடப்பெரிய 2 உலகக் கோப்பை மெடல்களை வென்று தம்முடைய வீட்டில் வைத்துள்ளதாகவும் அவர் பெருமை தெரிவித்துள்ளார். அதனால் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாதது அல்லது 10,000 ரன்கள் குவிக்காதது போன்ற சாதனைகளைப் பற்றி தாம் கவலைப்படவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எதற்காகவும் நான் வருத்தப்படவில்லை”
கம்பீர் பெருமிதம்:
“என்னுடைய வீட்டில் 2 உலகக் கோப்பை மெடல்கள் இருக்கிறது. இந்தியாவில் எத்தனை பேரிடம் அது இருக்கிறது? என்று சொல்லுங்கள். இந்தியாவில் கைவிட்டு எண்ணக்கூடிய நபர்களின் வீட்டில் மட்டுமே 2 உலகக் கோப்பை மெடல்கள் இருக்கும். என்னுடைய கேரியரை எதிர்மறையான பார்வையில் பார்த்தால் நான் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை, இன்னும் கொஞ்சம் அதிகம் கேப்டனாக செயல்பட்டிருக்கலாம் என்று சொல்லலாம்”
இதையும் படிங்க: இவ்வளவு எனர்ஜியை வைத்திருக்கும் விராட் கோலி.. ஏன் இந்த முடிவை எடுத்தார்ன்னு சொல்லனும்.. சேவாக் அதிருப்தி
“ஆனால் ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் எப்போதும் முடிவு கிடையாது. என்னுடைய முதல் அண்டர்-14, அண்டர்-19, 50 ஓவர் உலகக் கோப்பைகளை (2007) நான் தவற விட்டேன். அதிர்ஷ்டவசமாக என்னுடைய முதல் 50 ஓவர் உலகக் கோப்பையை (2011) வென்றேன். என்னால் ஃபைனலில் ரன்கள் அடிக்க முடிந்தது. எத்தனை பேர் அதை செய்துள்ளார்கள்? 10000 ரன்கள் அடிப்பது முக்கியமல்ல. எத்தனை பெரிய தொடர்களை வென்றுள்ளீர்கள்? உங்களது வீட்டில் எத்தனை மெடல்கள் உள்ளது? என்பதே முக்கியம்” எனக் கூறினார்.



