அந்த ஒரு பந்தை சமாளிக்க முடியாம ஹீரோ கோலி ரிட்டையராகலாமா? முடிஞ்சா நிரூப்பிச்சு காட்டுங்க.. ஃகைப் அதிருப்தி

Mohammed kaif 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சமீப காலங்களாகவே தடுமாற்றமாக பேட்டிங் செய்த அவரது நிலைமையில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் இந்தியா தோற்றது. அதனால் அவரை அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்தது. அதற்கு முன்பாகவே ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதாக நம்பப்படுகிறது.

அந்த நிலையில் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாகவும் அதை அவர் பிசிசிஐ’யிடம் சொல்லி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் ரோகித் போல விராட் கோலியும் ஓய்வு பெற்றால் அது இங்கிலாந்து மண்ணில் இந்திய பேட்டிங் துறையை பலவீனமாக்கும். எனவே விராட் கோலியிடம் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

- Advertisement -

சமாளிக்க முடியலயா:

இந்நிலையில் சமீபத்திய அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் விராட் கோலி தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்ததாக முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார். அந்த பந்தை சமாளிக்க முடியாமல் விராட் கோலி ஓய்வு பெறுகிறாரா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே விராட் கோலி அந்த பந்துகளை இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக எதிர்கொண்டு சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்து விட்டு ஓய்வு பெற வேண்டும் என்று கைஃப் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய கிரிக்கெட்டின் சிங்கம் போல கருதப்படும் விராட் கோலி ரிலாக்ஸ் செய்வதற்காக ஓய்வு பற்றி சிந்திக்கிறார். அவர் இங்கிலாந்துக்கு சென்று தன்னை நிரூபித்து தனது கேரியரை உச்சமாக முடிக்க வேண்டும். 2024 டி20 உலகக் கோப்பையில் கடினமாக உழைத்ததாலயே அவர் தனது கேரியரை உயரமாக முடித்தார்”

- Advertisement -

கைப் கோரிக்கை:

“அப்படிப்பட்ட அவர் தற்போது உதவி கிடைக்காததால் ஓய்வு பற்றி சிந்திக்கிறாரா? ஏனெனில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் என்ற ஒரு பந்து அவரை தொடர்ச்சியாக தடுமாற வைத்துள்ளது. 4வது ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்துகளுக்கு எதிராக அவர் நிறைய முறை விக்கெட்டை இழந்துள்ளார். இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் அந்த பந்துகளில் விக்கெட்டை இழந்த அவர் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சுழலுக்கு எதிராக தடுமாறினார்”

இதையும் படிங்க: 97 ரன்ஸ்.. முத்தரப்பு ஃபைனலில் இலங்கையை சாய்த்து 2024 தோல்விக்கு.. பழி தீர்த்த இந்தியா சாம்பியன்

“மிகவும் கடினமாக முயற்சிக்கும் அவர் 200% பங்களிப்பை கொடுக்கக்கூடியவர். ஆனால் இம்முறை அது வேலை செய்யவில்லை. ஆஸ்திரேலியாவில் முதல் போட்டியில் சதமடித்த பின்பும் விராட் கோலி தொடர்ச்சியாக தடுமாறினார். இதற்கு முன் இப்படி அவர் தடுமாறி நான் பார்த்ததில்லை. முதல் போட்டியில் சதத்தை அடித்தால் மற்ற போட்டிகளில் அவரை உங்களால் எளிதில் அவுட் செய்ய முடியாது. எனவே இந்தியாவின் ஹீரோவான விராட் கோலி இங்கிலாந்துக்கு சென்று தனது கேரியரை உச்சமாக முடிக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement