இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி தற்போது இந்திய ராணுவத்துடன் பயிற்சியினை ஜம்மு காஷ்மீர் பகுதியில் மேற்கொண்டு வருகிறார். அவருடைய பயிற்சி காலம் ஆகஸ்ட் 15ம் தேதி லே பகுதியில் கொடியேற்றத்துடன் முடிவடைகிறது.
.@msdhoni winning our hearts with his simplicity & humbleness. ❤????
No special privileges, No special protection. Because he is on national duty, just like our brave soldiers!#throwback #IndianArmy #Dhoni pic.twitter.com/fNjplZdmi1
— MS Dhoni Fans Official (@msdfansofficial) August 5, 2019
இந்நிலையில் தற்போது தோனியின் சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் தோனி ராணுவ வீரர்களின் வசிப்பிடத்தில் ஒரு சிறிய அறையில் ஒரு சிறிய கட்டிலின் மீது உட்கார்ந்து அவருடைய ஷூவிற்கு அவரே பாலிஷ் செய்வது போன்று அந்த புகைப்படம் உள்ளது.
ராணுவத்தில் லெப்டினண்ட் கர்னலாக பதவி வகிக்கும் தோனி இவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் தனது ஷூவிற்கு தானே பாலிஷ் செய்து பயிற்சிக்கு தயாராவது இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் மேலும் இந்திய ராணுவத்தின் மீது இளைஞர்களுக்கு ஒரு பெரிய அபிப்ராயத்தை ஏற்படுத்தும் என்றும் அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.