வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி தற்போது டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி விளையாட இருக்கிறது.
MUST WATCH – The "Speak Out" Challenge feat. @SDhawan25 & Shreyas ????????
This will surely leave you in splits ☺️???? – by @28anand
Full video here ????️????️https://t.co/TWFklxF7Rt pic.twitter.com/h7aa5r8i8k
— BCCI (@BCCI) August 8, 2019
இந்நிலையில் பி.சி.சி.ஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இந்திய அணியின் வீரர்களான தவான் மற்றும் ஐயர் ஆகியோர் பெரிய கிளிப்பை மாட்டி பேட்டி அளிக்கின்றனர்.
இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் நகைச்சுவையாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் ஐயர் மற்றும் தவான் ஆகியோர் கிளிப்பை மாட்டி பேசும் ஸ்பீக் அவுட் எனப்படும் ஒரு சேலன்ஞ் ஒன்றினை செய்துள்ளார்கள்.