நான் இவரை போன்று உயிரை கொடுத்து இந்தியாவுக்காக ஆட விரும்புகிறேன் – கலீல் அகமது பேட்டி

Khaleel
- Advertisement -

இந்திய அணியின் இளம் வீரரான கலீல் அஹமது தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் இந்தத் தொடர் குறித்தும் தனது அபிப்பிராயமாக வீரர் குறித்தும் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

khaleel

அதில் அவர் கூறியதாவது : இந்தியாவுக்காக ஜாகிர்கான் எவ்வாறு விளையாடினாரோ அதனைப் போன்று நானும் உயிரை கொடுத்து இந்தியாவுக்காக ஆட நினைக்கிறேன். மேலும் இந்திய அணியின் சொத்தாக நான் இருக்க என்னை நான் தயார் செய்து கொள்வேன் மேலும் நான் விளையாடும் வரை இந்திய அணியை பெருமைப்பட வைப்பதே எனது நோக்கம்.

எனக்கு எப்போதெல்லாம் சந்தேகம் வருகிறதோ அப்போதெல்லாம் ஜாகிர்கானை தொடர்பு கொள்கிறேன். அவரும் எனக்கு ஆலோசனை வழங்குவார் என்னால் அவனைப் போன்று சிறப்பாக இந்திய அணிக்காக பங்காற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். மேலும் எனது சிறப்பான ஆட்டத்தை நான் தொடர்ச்சியாக வழங்குவேன் என்று நம்பிக்கை என்னுள் இருக்கிறது என்று கலீல் கூறினார்

Advertisement