நாக்கை அடக்குங்க.. பாகிஸ்தானுக்கு பயந்து ஷார்ஜாவுக்கு ஓடிய கவாஸ்கர் பேசலாமா? இன்சமாம் விளாசல்.. நடந்தது என்ன?

Inzamam Ul Haq
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது. பாதுகாப்பு பிரச்சினைகளால் பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடியது. அங்கே பரம எதிரி பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து அணிகளையும் தோற்கடித்த இந்தியா தோல்வியே சந்திக்காமல் தங்களது மூன்றாவது சாம்பியன்ஸ் கோப்பையை முத்தமிட்டு உலக சாதனை படைத்தது.

மறுபுறம் தொடரை நடத்திய பாகிஸ்தான் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. குறிப்பாக நடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கிய அந்த அணி நியூசிலாந்திடம் தோற்றது. பின்னர் துபாயில் இந்தியாவிடம் போராடாமலேயே தோல்வியை சந்தித்தது. வங்கதேசத்துக்கு எதிரான கடைசிப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாத அணி என்ற மோசமான உலக சாதனையை பாகிஸ்தான் படைத்தது.

- Advertisement -

கவாஸ்கர் கருத்து:

இது போக ஏற்கனவே ஜிம்பாப்பே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் சமீபத்திய ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. அதன் காரணமாக தற்போதைய பாகிஸ்தான் அணியை இந்தியா பி அணி கூட எளிதாக தோற்கடிக்கும் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். அதே சமயம் திறமை இருந்தும் பாகிஸ்தான் இப்படி தடுமாறுவது தமக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பதாகவும் அவர் கவலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மரியாதைக்குரிய கவாஸ்கர் பாகிஸ்தானை பற்றி இவ்வாறு பேசாமல் நாக்கை அடக்கி வைக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒருமுறை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட பயந்து கொண்டு கவாஸ்கர் சார்ஜாவுக்கு ஓடியதாகவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

இன்சமாம் பதிலடி:

“இந்தியா போட்டியில் வெற்றி பெற்றது. அவர்கள் நன்றாக விளையாடினார்கள். ஆனால் மிஸ்டர் கவாஸ்கர் புள்ளி விவரங்களை பார்க்க வேண்டும். ஒருமுறை அவர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதில் இருந்து தப்புவதற்காக சார்ஜாவுக்கு பறந்தார். அவர் எங்களை விட வயதானவர் சீனியர். நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம். ஆனால் அவர் எங்களுடைய நாட்டைப் பற்றி இவ்வாறு பேசக்கூடாது”

இதையும் படிங்க: முதல் சர்வதேச கேப்டனாக சாம்பியன்ஸ் டிராபியில் அசத்தல் சாதனை நிகழ்த்திய – ரோஹித் சர்மா

“உங்களது அணியை தேவையான அளவுக்கு பாராட்டுங்கள். ஆனால் மற்ற அணிகளை இவ்வாறு பேசுவது நல்ல ருசியல்ல. கவாஸ்கரை புள்ளி விவரங்களை பார்க்கச் சொல்லுங்கள். அவருக்கு பாகிஸ்தான் எங்கே இருக்கிறது என்று தெரியும். நான் அவருடைய கருத்தால் ஆழமான காயத்தை சந்தித்தேன். அவர் சிறந்த மரியாதைக்குரிய கிரிக்கெட்டர். ஆனால் இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பதால் அவர் தனது பெயரைத் தான் குறைத்துக் கொள்கிறார். அவர் தன்னுடைய நாவை கட்டுப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

Advertisement