இந்திய பெண்ணை திருமணம் செய்வதால் நான் இதனை கூறவில்லை. இருப்பினும் இவர்கள் வந்தால் எனக்கு மகிழ்ச்சி – ஹசன் அலி ஓபன் டாக்

Hasan-Ali
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரரான சோயப் மாலிக், இந்திய அணியின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை திருமணம் செய்தபோது பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அந்த திருமணத்தை பரபரப்பாக பார்த்தன.

Hasan-Ali-2

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு பாகிஸ்தான் வீரர் இந்திய பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலி. 2016ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமானார். அடுத்த ஆண்டிலேயே (2017) ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் தொடர் நாயகன் விருது பெற்று கிரிக்கெட் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தார். மேலும் 2017 ஆம் ஆண்டு விரைவாக 50 விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

ஹசன் அலி தற்போது ஹரியானா மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஷமையா என்பவரை காதல் திருமணம் புரிய உள்ளார். ஷமையா ஒரு ஏரோநாட்டிக்கல் பட்டதாரி ஆவார். இவர் பிளைட் இன்ஜினியராக எமிரேட்ஸ் ஏர்லைன்சில் வேலை பார்க்கிறார்.

இந்நிலையில் தனது திருமணம் குறித்து பேட்டியளித்த பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி கூறியதாவது : என்னுடைய திருமணம் துபாயில் நடந்தாலும் அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு இந்திய அணி வீரர்களை நான் எதிர்பார்க்கிறேன். மேலும் நான் கண்டிப்பாக இந்திய வீரர்களுக்கு என்னுடைய திருமண அழைப்பை விடுப்பேன். அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டால் அது எனக்கு மேலும் மகிழ்ச்சியைத் தரும் என்று ஹசன் அலி கூறினார்.

ஷமையா ஹரியானா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டாலும் தற்போது பெற்றோர்களுடன் துபாயில் வசித்து வருகிறார். இவர்களது திருமணம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. துபாய் அட்லாண்டிஸ் பாம் ஹோட்டலில் நடைபெற உள்ள இந்த திருமண விழாவிற்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement