என்னையே கோபப்பட வெச்சுட்டாங்க? வம்பிழுத்த சாம் கோன்ஸ்டஸ்க்கு கொடுத்த பதிலடி என்ன? பும்ரா பேட்டி

Jasprit Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்த அவர் தனி ஒருவனாக வெற்றிக்குப் போராடினார். குறிப்பாக முதல் போட்டியில் கேப்டனாக 8 விக்கெட்டுகளை சாய்த்த பும்ரா 297 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சரித்திர வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

இருப்பினும் கடைசிப் போட்டியில் அவர் காயத்தை சந்தித்ததால் இந்தியா தொடரை சமன் செய்யும் வாய்ப்பை நழுவ விட்டது. முன்னதாக சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் நாளின் இறுதியில் உஸ்மான் கவாஜா – சாம் கோன்ஸ்டஸ் ஆகியோர் பேட்டிங் செய்தனர். அப்போது அதிக ஓவர்களை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக உஸ்மான் கவாஜா வேண்டுமென்றே நேரத்தை வீணடிக்கும் வகையில் நடந்து கொண்டார்.

- Advertisement -

கோன்ஸ்டஸ்க்கு பதிலடி:

அதற்கு என்னவாயிற்று? ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? என்ற வகையில் பும்ரா அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனால் அதற்கு எதிர்ப்புறமிருந்த இளம் சாம் கோன்ஸ்டஸ் தேவையின்றி பும்ராவிடம் சில வார்த்தைகளை பேசினார். அதற்கு அஞ்சாமல் பதிலடி கொடுத்த பும்ரா அடுத்த பந்திலேயே கவாஜாவை அவுட்டாக்கினார். அப்போது அப்படியே திரும்பிய பும்ரா அருகில் இருந்த கோன்ஸ்டஸை பார்த்து முறைத்தார்.

அதே போல இந்திய அணியினரும் தங்களது கேப்டனை சீண்டிய கோன்ஸ்டஸ்க்கு அருகே சென்று மிரட்டும் வகையில் வெறித்தனமாக கொண்டாடி பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் அந்த நேரத்தில் கோன்ஸ்டஸிடம் என்ன சொன்னீர்கள் என்று சமீபத்திய நிகழ்ச்சியில் பும்ராவிடம் தொகுப்பாளார் கேட்டார். அதற்கு பும்ரா பதிலளித்தது பின்வருமாறு.

- Advertisement -

பும்ரா கோபப்பட காரணம்:

“நீங்கள் வேறு ஏதாவது உணர்ந்தீர்களா என்பது எனக்குத் தெரியாது. அந்த தருணத்தில் அவரிடம் அனைத்தும் நன்றாக இருக்கிறதா? உங்களுடைய அம்மா நலமா? வீட்டில் அனைவரும் நலமா? என்று முக்கியமாக கேட்டேன். அதற்கு ஆம் நலம் என்று அவர் சொன்னார். சரி பவுலிங் செய்கிறேன் என்று அவரிடம் மீண்டும் சொன்னேன். வெளியில் உள்ள நீங்கள் அதை வேறு மாதிரி எடுத்துக் கொண்டிருக்கலாம்”

இதையும் படிங்க: 44 ரன்ஸ்.. நியூஸிலாந்தை சுருட்டிய வருண்.. 2013க்குப்பின் அபார சாதனை.. செமி ஃபைனலில் ஆஸியை சந்திக்கும் இந்தியா

“வார்த்தைகள் இல்லாததால் சில தவறான தொடர்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். பொதுவாக போட்டி நெருக்கமாக செல்லும் போது இது போன்ற நிகழ்வுகள் நடக்கும். எங்களைப் போலவே அவர்களும் கொஞ்சம் நேரத்தை வீணடிக்க முயற்சி செய்தார்கள். நாங்கள் அவர்கள் மீது அழுத்தத்தைப் போட முயற்சிப்போம். ஆனால் அந்த நேரத்தில் நடந்தது சரியான எடுத்துக்காட்டு கிடையாது. அனைத்து நேரங்களில் நானும் கோபப்பட மாட்டேன். ஆனால் சில நேரங்களில் இப்படி நடக்கும்” என்று கூறினார்.

Advertisement